100 ஜிபி கூகுள் ஒன் கிளவுட் ஸ்டோரேஜை இலவசமாக பெற !

100 ஜிபி கூகுள் ஒன் கிளவுட் ஸ்டோரேஜை இலவசமாக பெற அற்புத டிப்ஸ் 100 ஜிபி கூகுள் ஒன் கிளவுட் ஸ்டோரேஜை இலவசமாக பெற அற்புத டிப்ஸ்:

கூகுள் லோக்கல் கைட்ஸ் (Local Guides) சேவையில் புது சலுகை வழங்கப்படுகிறது. லோக்கல் கைட்ஸ் அம்சம் கூகுள் மேப்ஸ் சேவையில் அடிக்கடி புது விவரங்களை வழங்கி, இடங்களுக்கு விமர்சனம் வழங்குவோருக்கானது ஆகும். பயனர்களை ஊக்குவிக்கும் வகையில், கூகுள் தற்சமயம் 100 ஜி.பி. கூகுல் ஒன் கிளவுட் மெமரியை இலவசமாக வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் பயனர்களுக்கு 100 ஜி.பி. கூகுள் ஒன் கிளவுட் ஸ்டோரேஜ் முதல் ஆறு மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சலுகை பயனர்கள் விரும்பும் பட்சத்தில் இதே சேவைக்கு கட்டணம் செலுத்தி தொடரலாம். இதற்கான கட்டணம் மாதம் ரூ.130 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பின்பற்ற வேண்டிய வழிமுறை: நீங்கள் வெளியே செல்லும் போது அந்தந்த இடங்களை புகைப்படம் எடுத்து அவற்றை தொடர்ச்சியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது இலவச கிளவுட் ஸ்டோரேஜ் வசதியை பெற முடியும். தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு கூகுள் சார்பில் மின்னஞ்ல் ஒன்று அனுப்பப்படும். இந்த மின்னஞ்சலில் 100 ஜிபி இலவச கிளவுட் ஸ்டோரேஜ் பயன்படுத்துவதற்கான ஆக்டிவேஷன் கோட் இடம்பெற்று இருக்கும். 180 நாட்கள் எனினும், இந்த சலுகையை பயன்படுத்த பயனர்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு வைத்திருக்க வேண்டும். ஆறு மாதங்கள் அல்லது 180 நாட்கள் நிறைவுற்றதும், கூகுள் மாதம் ரூ.130 கட்டணத்தை உங்களது டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் கட்டணமாக எடுத்துக் கொள்ளும். 

பயனர்கள் இதற்கு ஒப்புக் கொள்ளாத பட்சத்தில் சலுகையில் இருந்து விலகி கொள்ளலாம். ஒன் கிளவுட் ஸ்டோரேஜ் கூகுள் ஒன் கிளவுட் ஸ்டோரேஜ் அதிகபட்சம் ஐந்து நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இதற்கு பயனர்கள் எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆறு மாதங்களுக்கு பின் பயனர்கள் கட்டணம் செலுத்தாத பட்சசத்தில், அவர்கள் பதிவு செய்து வைத்திருந்த தகவல்கள் அனைத்தும் அழிந்து போகும். மின்னஞ்சல் லோக்கல் கைடு என்ற வகையில், நீங்கள் கூகுள் ஒன் சேவையை இலவசமாக பயன்படுத்தலாம். லோக்கல் கைடுகள் கூகுள் பெர்க்களை விரும்புவர் என தெரியும். அந்த வகையில் அதிக தகவல் வழங்குவோருக்கு சன்மானம் வழங்கப்படுகிறது. கூகுள் ஒன் சந்தா ஆறு மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் கீழ் 100 ஜி.பி. இலவச மெமரி டிரைவ், ஜிமெயில், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இந்த இலவச மெமரியை அதிகபட்சம் ஐந்து பேருடன் பகிர்ந்து கொள்ளலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்