Business

இன்றைய 22-பிப்-2019 விலை (சென்னை): பெட்ரோல் ரூ 74.02 (லி) | டீசல் ரூ 70.25 (லி) | தங்கம் விலை நிலவரம் : 22 காரட் 1கி ரூ 3,212 | 24 காரட் 1கி ரூ 3,495 | வெள்ளி விலை நிலவரம் : வெள்ளி 1 கிலோ ரூ 43,600 | டாலர் மதிப்பு 1$ = ரூ 71.18

கோயம்புத்தூரான கோவன் புத்தூர் வரலாறு தெரியுமா ?

தமிழகத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பெரியநகரம் கோயம்புத்தூர். ஆட்டோமொபைல் மற்றும் மோட்டார் தொழிலில் கொடி கட்டிப் பறக்கும் கோவை தமிழகத்தின் டெட்ராய்ட் என்ற புகழமையும் பெற்றுள்ளது. மாவட்டம் முழுவதும் தொழில் நிறுவனங்கள் பரவிக் கிடக்கின்றன. அவற்றிற்கெல்லாம் மேலாக, இதமான தட்பவெப்பம், மேற்குத் தொடர்சி மலையில் ஜில்லென்ற காற்று, விருந்தோம்பலில் பட்டம் பெற்ற மக்கள் என இவ்வூரின் சிறப்புகள் நிறைந்த பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இத்தனையுள்ள கோயம்புத்தூர், கொங்கு, கோவை, கோனியம்மன்புத்தூர்-ன்னு பல பேர்களையும் கொண்டு தனித்துவமா உள்ளது. இந்த ஊரோட உண்மையான வரலாறு தான் என்ன ? 
கொங்கு மண்டலம் தற்போது, தமிழகத்தில் சென்னை மாநகருக்கு அடுத்தபடியாக பெரிய நகரமாக உள்ள கோவை, ஒரு காலத்தில் கொங்கு மண்டலத்தின் ஒருபகுதியாக இருந்தது. வடக்கே தலைமலை என்னும் கோபிசெட்டிபாளையம், கிழக்கே கொல்லிமலை, தெற்கே பழனி, மேற்கே நீலகிரி என நான்கு பக்கமும் மலைகள் சூழ கொங்கு மண்டலத்தில் கோவையும் முக்கிய வணிக நகராக இருந்துள்ளது. கோவையின் ஆட்சியாளர்கள் கி.பி. 3-ம் நூற்றாண்டு தொட்டு 9-ம் நூற்றாண்டு வரை கோவையை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தை ஆட்சி செய்தது கங்க மன்னர்கள். அவர்களைத் தொடர்ந்து, கொங்கு சோழர்களும், பாண்டிய மன்னர்களின் சிற்றரசர்களும் என்கிறது வரலாறு. 

ரோமானியர்கள் வருகை கேரள கடற்கரைகள் முன்னொருகாலத்தில் வஞ்சித்துறைமுகம் என அழைக்கப்பட்டு வந்தது. அப்போதுதான், ரோமானிய வியாபாரிகள், கேரளா வழியாக கோவை வந்து முட்டம் மற்றும் கொடுமணலில் ரத்தினம் உள்ளிட்ட செல்வங்களை வாங்கி சென்றுள்ளனர். இதற்கான ஆதாரங்கள், திருப்பூர் அடுத்துள்ள கொடுமணலிலும், சிங்காநல்லூர் அடுத்துள்ள வெள்ளலூரிலும் நடந்த அகழ்வாராய்ச்சியில் ஏராளமாக கிடைத்தன. நொய்யல் நதி இன்று எல்லைகளில் மட்டுமே பசுமையாகக் காணப்படும் கோவை ஒரு காலகட்டத்தில் ஊர் முழுக்கவே அடர்ந்த காடுகளாக இருந்தது.ஒரு சில இடங்களில் மட்டுமே நெல், வாழை, கரும்பு என விவசாயம் நடைபெற்றுள்ளது. இவை அனைத்தும் ஒரே நீராதாரமாக இருந்தது காஞ்சிமாநதி என்னும் நொய்யல் நதியாகும். இன்று அந்த நதி இருந்ததற்காக ஆதாரத்தை தேடி நாம் அழைவது தனிக் கதை. நொய்யல் தடுப்பணை இன்று இருந்த தடம் அறியாமல் போன நொய்யல் ஆற்றின் குறுக்கே 700 ஆண்டுகளுக்கு முன்பு 23 தடுப்பணைகள் கட்டி, 100 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாய்க்கால் வெட்டியதோடு அவற்றின் மூலம் 36 குளங்களில் தண்ணீர் சேமித்துள்ளனர் நம் கோவை மக்கள். இன்றும், கோவையில் சற்று நிலத்தடி நீர்மட்டம் சீராக இருக்கக் காரணம் அப்போது இருந்த நொய்யல் ஆறும் அதன் குளங்களுமே.பேரூர் பட்டீஸ்வரர் கோவில் நொய்யல் ஆற்றின் கரையில் திருப்பேரூர் என்று அழைக்கப்படும் இடத்தில் தான் இப்போது பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. பேரூர் கோவிலில் விஜயநகர பேரசின் காலத்தில் மாதையன் என்ற மன்னர் கட்டிய தெப்பக்குளம் இன்றும் காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது. பேரூர் கோவிலின் கனகசபை மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் உலக பிரசித்தி பெற்றவை. கோவன் புதூர் பண்டையக் காலத்தில் கோசர்கள் இப்பதியை ஆட்சி செய்ததால் கோசன் புத்தூர் என பெயர் பெற்று பிற்காலத்தில் கோவன்புத்தூர், கோயம்புத்தூர் என மருவியதாக ஓர் கதை உள்ளது. கோவையைப் பொருத்தவரையில் மலைகள் சூழ்ந்த பகுதியில் வாழ்ந்து வந்த பழங்குடி மக்களின் தலைவனான கோவன் என்பவரின் பெயர் முதலில் கோனியம்மன் கோவிலுக்கு சூட்டப்பட்டு பின், கோவன் புத்தூர் எனவும், பிற்காலத்தில் மருவி கோயம்புத்தூர் என்ற பெயரைப் பெற்றதாக வரலாற்றுக் குறிப்புகளும் உள்ளது.ஒப்பணக்கார வீதி கோயம்புத்தூரில் என்றும் பரபரப்பாக செயல்படும் பகுதி ஒப்பணக்கார வீதி. பல்வேறு தொழில்நிறுவனங்கள், பெரிய பெரிய கடைகள், நகை, துணி வியாபாரம் என பெரும்பகுதி நேரம் இங்கு பரபரப்பாகவே காட்சியளிக்கும். இப்பகுதியில் வசிப்பவர்கள் கூட சற்று மாறுபட்ட கலாச்சாரம் கொண்டவர்களாகவே இருப்பர். இதற்குக் காரணம் தெரியுமா ?. விஜயநகர பேரரசில் சேனைகளில் வேலை பார்த்த பலிஜா சமூகத்தினர் பணம் ஒப்புவிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள்தான் இந்த வீதியின் பெயருக்கு காரணமான ஒப்பணக்காரனர்கள். பணத்தை ஒப்புவிக்கும் பலிஜா சமூகத்தினர் குடியேறியதால் ஒப்பணக்கார வீதி என்ற பெயர் வந்துள்ளது. கோட்டை மேடு உக்கடம் அருகே, டவுன்ஹாலுக்கு பின்புறம் முன்னொரு காலத்தில் கோட்டை ஒன்று இருந்துள்ளது. பிரிட்டிஷ் மற்றும் மைசூர் படைகளுக்கு இடையே நடைபெற்ற போரில் அந்தக் கோட்டை சிதிலமடைந்தது. தொடர்ந்து, நடைபெற்ற போரின்போது திப்புவின் உத்தரவின் பேரில் இந்த கோட்டை தரைமட்டமாக்கப்பட்டது. அந்த கோட்டையின் குவியல்கள் தான் மேடாக மாறி இன்றைய கோட்டை மேடாக உள்ளது.


நன்றி nativeplanet

Post a Comment

0 Comments