Business

தமிழ் வாழ்க !


இன்றைய 25-மார்ச்-2019 விலை (சென்னை): பெட்ரோல் ரூ 75.67 (லி) | டீசல் ரூ 70.26 (லி) | தங்கம் விலை நிலவரம் : 22 காரட் 1கி ரூ 3,082 | 24 காரட் 1கி ரூ 3,362 | வெள்ளி விலை நிலவரம் : வெள்ளி 1 கிலோ ரூ 41,500 | டாலர் மதிப்பு 1$ = ரூ 69.12

குளிர்காலம் வந்துட்டா ஏன் தினமும் பட்டாணி சாப்பிடணும் தெரியுமா? இன்னைக்கே சாப்பிட ஆரம்பிங்க...

காய்கறிகள் என்றாலே நமது உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை வழங்கக் கூடியது. அதிலும் பச்சை பட்டாணியில் அதிகளவு ஸ்டார்ச் அதாவது கார்போஹைட்ரேட் அதிகளவில் உள்ளது. இது கலோரிகள் குறைந்த ஒன்று என்றாலும் இதில் நார்ச்சத்து, புரோட்டீன், விட்டமின் ஏ மற்றும் விட்டமின் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் பட்டாணி இது பார்ப்பதற்கு வடிவில் சிறியதாக இருந்தாலும் எல்லாருக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. இது பருப்பு வகையை சார்ந்தது. இந்த பச்சை பட்டாணியை பாடம் பண்ணி உலர வைத்தோ அல்லது ப்ரஷ்ஷாகக் கூட வழங்குகின்றனர். மேலும் இதில் மாங்கனீஸ், இரும்புச் சத்து, போலேட் மற்றும் தயமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதன் அதிகமான நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. 



பசியை தீர்க்கும் இதன் அதிகமான நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் நமக்கு வயிறு நிறைந்த திருப்தியை கொடுக்கிறது. பசி மற்றும் உடல் எடை இழப்பிற்கு உதவுகிறது. சீரணத்தை மெதுவாக்கி பசியை போக்குகிறது. இதய ஆரோக்கியம் மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன. இது இரத்த அழுத்தம் போன்றவற்றை தடுத்து இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. இதன் நார்ச்சத்தால் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. 

சீரண சக்திக்கு உதவுதல் பச்சை பட்டாணி சீரண சக்திக்கு உதவுகிறது. குடலில் நல்ல பாக்டீரியாவை அதிகரித்து குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதன் நார்ச்சத்தால் மலச்சிக்கல் பிரச்சினையை போக்குகிறது. ரத்த சர்க்கரை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்தல் இதனுடைய முக்கியப் பண்பாக இருக்கிறது. பச்சை பட்டாணி குறைந்த கிளைசெமிக் குறியீட்டு எண் கொண்டு இருப்பதால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது. இதிலுள்ள புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துகள் இதே வேலையை செய்கிறது. இதன் நார்ச்சத்துகள் உணவிலுள்ள கார்போஹைட்ரேட் உறிஞ்சுவதை குறைத்து இரத்தத்தில் அதிக அளவில் சர்க்கரை சேராமல் இருக்க உதவுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்