செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது நல்லதா?

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது நம் முன்னோர் நமக்கு கற்றுத்தந்த உணவு முறைகளில் ஒன்று. பெரும்பாலும் அதிக வெப்பப் பகுதிகளில் வாழும் தமிழர்கள் இம்முறையை விரும்பி தழுவியிருந்தனர். செம்பு பாத்திரத்தின் கிருமி எதிர்க்கும் தன்மை குறித்து தமிழ் மருத்துவ சமூகம் பெரிதும் ஆர்வம் காட்டி வந்துள்ளதை தமிழரின் பண்பாட்டுக் கூறுகள் நமக்குப் புலப்படுத்துகின்றன. தண்ணீரை சரியான முறையில் சேமித்து வைப்பதன் முக்கியத்துவத்தையும், எப்படி செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அருந்துவது நம் உடலில் உள்ள பல்வேறு நச்சு பொருட்களை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது பற்றியும் தமிழரின் வாழ்வியல் பார்வையில் புரிந்து கொள்வது அவசியம்.உடலும் உயிரும் இணைந்த கலவைதான் நாம். மனித உடலின் பெரும்பகுதி நீரால் ஆனது. அவ்வாறே நமது பூமியும் 2/3 பங்கு நீரால் ஆனது. எனவே பஞ்ச பூதங்களில் நீர் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. அதேநேரத்தில் அந்த நீர் எவைஎவையோடு தொடர்பு கொண்டுள்ளதோ அவற்றின் குணனலன்களையும் உள்வாங்கக்கூடியது. உப்பு கலந்த நீர் உவர்க்கும். கசப்பு சுவை கலந்தால் நீர் கசக்கும். அவ்வாறே செம்பு பாத்திரத்தில் 4-5 மணிநேரம் வைக்கப்பட்ட நீர் செம்பு என்ற உலோகத்தின் தன்மைகளைப் பெறுகிறது.

தண்ணீருக்கு நினைவாற்றல் கூட இருப்பதாக மாபெரும் ஆரய்ச்சிகள் நடந்தவண்ணம் இருக்கின்றன. எதையெல்லாம் நீர் தொட்டாலும் அதை நினைவில் நீர் நினைவில் வைத்துக் கொள்கிறது என்பதை பல ஆரய்ச்சிகள் நமக்கு தெரிவிக்கின்றன. நீரைப் பற்றி நன்கு உணர்ந்த பாரம்பரியம் மிக்க தமிழ் சமுகத்தில் பிறந்ததால் நீரைப்பற்றி நமது பண்பாடு நமக்கு கற்றுத் தந்த பல கூறுகளை நாம் இன்னும் பின்பற்றி வருகிறோம். மிகுந்த அக்கறையோடும் பொறுப்புணர்வோடும் நமது முன்னோர்கள் நமக்குக் கற்றுத் தந்த இப்பாடங்களை நாம் அக்கறையோடு தொடர்வது அவசியம். நம் முன்னோர்கள் சும்மா யாரிடம் இருந்தும் தண்ணீரும், உணவும் வாங்கி சாப்பிட அனுமதிக்க மாட்டார்கள். நம் மீது அன்பும் அக்கறையும் உள்ளவர்களிடம் இருந்து மட்டுமே இவற்றை பெற வேண்டும் என்று சொல்லி வைத்துள்ளனர். கோவில்களில் சிறிய அளவு நீரைத்தான் தீர்த்தமாகக் கொடுப்பார்கள். ஏனென்றால் அதை நீங்கள் எங்கேயும் விலை கொடுத்து வாங்க முடியாது. அனைத்தையும் கடந்த உணர்வோடு கலந்த நீர் தெய்வீகத்தை தன்னுள் வைத்திருக்கிறது. அத்தகைய நீரே தீர்த்தமாகிறது. தங்களுக்குள் இருக்கும் தெய்வீகத்தை நினைவுபடுத்துவதால் மக்கள் அதை அருந்த விரும்புகின்றனர். எந்த விதமான நினைவை சுமந்து இருக்கிறது என்பதை பொறுத்து அதே தண்ணீர் விஷமாகவும் இருக்க முடியும், வாழ்வின் அமிர்தமாகவும் இருக்க முடியும்.
எனவே நீருக்கு நினைவு இருப்பதால் நாம் அதை எப்படி சேமித்து வைக்கிறோம் என்பதில் கவனமாக இருக்கிறோம். தண்ணீரை செம்பு பாத்திரத்தில் இரவே அல்லது குறைந்தது நான்கு மணி நேரமாவது சேமித்து வைத்தால் செம்பில் இருந்து ஒரு இயல்பை நீர் பெறுகிறது. இது குறிப்பாக உங்கள் ஈரலுக்கும், பொதுவாக உங்கள் உடல்நலத்திற்கும், சக்திக்கும் நல்லது. முரட்டுத்தனமாக இறைத்து உங்கள் வீட்டுக்கு ஈயம் அல்லது பிளாஸ்டிக் குழாய்கள் மூலம் பல வளைவுகள், திருப்பங்கள் கடந்து வரும்பொழுது தண்ணீரில் பல எதிர்மறை நிகழ்வுகள் ஏற்படுகின்றன. இந்த குழாய் நீரை ஒரு மணி நேரம் அப்படியே விட்டு விட்டால் இந்த எதிர்மறை விஷயங்கள் தானாக விலகி விடும். என்னை போல் அதிகம் பயணம் செய்பவராக இருந்தால், உணவு விஷயத்தில் கட்டுப்பாடு இல்லையென்றால், குறைந்த அளவு விஷம் உங்கள் உடலில் பல விதத்தில் உள்ளே நுழைகிறது. செம்பு இந்த விஷயத்தை கவனித்துக் கொள்ளும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்