இழந்தை பழம் / மரத்தின் மருத்துவ குணங்கள் ...

நமது தோட்டத்தில் இழந்தை மரம் இருக்கிறது அதை தினமும் தொடர்ந்து சாப்பிட்டபோது பல பல மாற்றங்களை உணர்ந்தேன் அப்போது நாமக்கல்லில் உள்ள நமது உறவினர் ஒருவர் இழந்தைபழம் சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு வெகுவாக கட்டுபடுவதாக கூறியது நினைவிற்கு வந்ததும் நம்மிடம் பணிபுரியும் இருவருக்கு இந்த பழத்தை இரண்டு கைப்பிடியளவு சாப்பிட தந்ததும் தொடர்ந்து இருபது நாட்களில்  சர்க்கரையின் அளவு 280 லிருந்து 160 க்கு குறைந்தது தெரிய வந்தது மற்றொருவருக்கு 340 லிருந்து 200 க்கு குறைந்ததும் மிகவும் ஆச்சர்யமாக இருந்தது இத்துடன் சர்க்கரையை குறைக்க மூலிகை பொடியையும் சேர்த்தே கொடுத்தேன் அவர்களின் கூற்று.....
கைக்கால் குடைச்சல் மற்றும் உடல் வலி சோர்வு என்பது துளியும் ஏற்படவில்லை என்பதை கேட்கும் போது ஆஹா இவ்வளவு மேட்டர் இதிலிருக்கா என்று இதை பற்றிய ஆய்வு செய்ய முயன்றேன்.......பித்தத்தை சமநிலை படுத்தி கணையத்தில் இன்சுலின் சுரப்பை அதிகபடுத்தி உடலில் உள்ள சர்க்கரையை எரித்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கிறது இதனால் தான் இழந்தை பழம் சாப்பிட்டால் வாந்தி தலைசுற்றல் மயக்கம் எல்லாம் தீரும் என்பது இதன் அடிப்படையில் தான் எங்க அக்கா பேருந்து பயணத்தில் வாந்தி எடுக்கும் அப்போதெல்லாம் இழந்தை பழம் அல்லது இழந்தைவடை ஏதாவது ஒன்றை வாயில் போட்டு அடக்கி வைத்து கொள்வாங்க...

எனது அக்கா தங்கைகள் எல்லோரும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலிக்காக சின்னபாப்பா எனும் மருத்துவச்சி ஆயா உண்டு எங்கள் ஊரில்  அவரிடம் போய் மருந்து வாங்கி சாப்பிடுவது உண்டு அவர் இழந்தைஇலை மற்றும் மிளகு பூண்டு இவற்றை கைஅம்மியில் அரைத்து கோலியளவு தருவார்கள் வலி உடனடியாக போய்விடும் மேலும் அந்த நாட்களில் ஏற்படும் தலைவலி தலையில் நீர் கோர்த்தலுக்கு இதன் இழை அருமையான மருந்து என்று கூறியதையும் கவனத்தில் கொள்வோம் மேலும்  அவரிடம் வினவியதற்கு குழந்தைபேறு இல்லாதவர்களுக்கும் இதை கொடுத்தால் கர்ப்பபையில் உள்ள வாயுவை வெளியேற்றி குழந்தை உருவாக காரணமாக இருக்கிறது என்பதையும் அறிந்து கொண்டேன் .....
பாலைவன பகுதிகளில் வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் நீர் இழப்பை குறைக்க இழந்தை இலையை நீரில் போட்டு குளிந்தாலோ அல்லது குடித்தாலோ மட்டுபடுகிறது என்பதை அறிந்த்தால் தான் நபிகள் நாயகம் அவர்கள் இதை பற்றிய மருந்துவ குறிப்புகளை வழங்கியுள்ளார் என்பதையும் கவனத்தில் கொள்ளவும் மேலும் ஆரேபிய பகுதிகளில் இறந்தவர்களை இந்த இலையை போட்டு கொதிக்க வைத்து அந்த நீரில் குளிபாட்டியதிலிருந்து இன்னொன்றையும் உணரமுடிகிறது இது மிகச்சிறந்த கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது என்பதையும்


மேலும் அதிவியர்வைக்கு அருமருந்து இது தான் இதன் இலைகளை பரித்து நன்றாக அறைத்து அதன் சாற்றை உள்ளங்கை உள்ளங்காலில் தடவி காலையில் எழுந்து இதன் தலையை போட்டு கொதிக்க வைத்த நீரில் குளித்து பாருங்கள் ஒரு வாரம்  உள்ளங்கால் கை வியர்த்தல் பூரண குணமாகும் .... 

நபிகள் இதை சிறப்பாக குறிப்பிட வியர்வையின் மூலம் உடலில் உள்ள நீர்சத்து குறைவதை மட்டுபடுத்துவதனால் தான் இவற்றை கொண்டாடி இருக்கிறார் பாலைவன பகுதிகளில் உள்ளவர்களுக்கே இதன் அவசியம்புரியும் ......

இது வரண்டநில தாவரம் ஆதலால் இதன் குணங்களும் அதிகம் என்பது  உங்களுக்கும்  தெரியும் பேரீட்சையை சாப்பிட்டு உணர்ந்த நல்ல விடயங்களை விட இழந்தைபழத்தை சாப்பிட்டு நான் உணர்ந்தது மிக மிக அதிகம்  மிகவும் சுறுசுறுப்பாக வைத்து கொள்கிறது சோர்வோ கொட்டாவியோ வரவே வராது எவ்வளவு தூரம் நடந்தாலும் கால் வலியோ இயலாமையோ ஏற்பட்டதில்லை எனக்கு..... சேலம் சிவராஜ் கிட்ட லேகியம் வாங்கி சாப்பிடுபவர்கள் பதினைந்து நாள் தொடர்ந்து இழந்தைபழத்தை சாப்பிட்டு விட்டு அப்புறம் சொல்லுங்கள் இழந்தை பழம் இழந்ததை மீட்கும் என்று .....

மேலும் விந்துவில் உயிரணுக்களின் எண்ணிக்கையை கூட கூட்டகூடும் அதற்கான நிறைய முகாந்திரங்கள்  உண்டு யாராவது பயன்படுத்தி பின்பு சோதித்து அதன் முடிவை தெரியமடுத்துங்கள் .....


அற்புதமான முன்னேற்றத்தை உணர்வீர்கள்  இதன் சிறப்பம்சத்திற்கு காரணம் இதிலுள்ள பொட்டாசியம், கால்சியம் ,சோடியம் மற்றும் இரும்பு சத்துக்கள் மிகுதியான இருப்பதனாலே  அதனால் தான் நரம்பு மண்டலம் வலுவடைகிறது  இதன் காரணமாக ஞாபக சக்தியும் அதிகரிக்கிறது... என்கிறார்கள் 

ஒருவேளை இவற்றில் நைட்ரஜனும் இருக்க கூடும் ....ஆய்வுக்குரியதே...
பொட்டாசியம் உள்ளதால் கொஞ்சம் தொண்டை கட்டகூடும் சிலருக்கு அவர்கள் மிளகு தூளையும் உப்பையும் தூவி சாப்பிடுங்கள் .....


அதிக விலை கொடுத்து வாங்கும் கிவி,ஆஸ்திரேலிய ஆப்பிள் போன்ற  மேற்கத்திய பழங்களை விட பத்து ரூபாய்க்கு வாங்கி சாப்பிடும் இழந்தையின் சிறப்பு 100 மடங்கு சிறப்பானவை  என்பதை அனுபவத்தில் உணர்ந்தவன் நான்

கருத்துரையிடுக

0 கருத்துகள்