வானிலை தகவல்களை வழங்கும் 'நம்ம உழவன்' செயலி !

வானிலை தகவல்களை வழங்கும் 'நம்ம உழவன்' செயலி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மேலவாசலில் வசித்து வருபவர் ஆசிரியர் செல்வகுமார். இவர் தினமும் வானிலை குறித்து ஆராய்ந்து மழை பற்றிய தகவல்களை அனைவருக்கும் தெரியப்படுத்தி வந்தார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தான் வசிக்கும் பகுதிகளில் உள்ள டீ கடைகளில் மழை விபரங்களை எழுதி வந்துள்ளார்.பின்னர் செல்போன்களின் பயன்பாட்டிற்கு பிறகு குறுஞ்செய்தியாகவும் பிறகு வாட்ஸ் ஆப் மூலமாகவும் தகவல்களை பகிர்ந்து வந்துள்ளார். இந்நிலையில்  வானிலை தகவல்களை அனைத்து தரப்பினரிடமும் விரைவாக கொண்டு செல்லும் விதத்தில் 'நம்ம உழவன்' என்ற புதிய செயலியை தொடங்கியுள்ளார்.

                    நம்ம உழவன் செயலியை டவுன்லோட் செய்ய :

கருத்துரையிடுக

0 கருத்துகள்