செவ்வாயிலிருந்து வந்த பீப் சவுண்ட்.. இன்சைட்டால் 6.30 நிமிடம் உயிரை கையில் பிடித்திருந்த நாசா!

வெற்றிகரமாக தரை இறங்கியது இன்சைட். புகைப்படமும் அனுப்பியது நியூயார்க்: செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கி இருக்கும் நாசாவின் இன்சைட் ரோபோட் பூமிக்கு பீப் சத்தம் ஒன்றை சிக்னலாக அனுப்பி இருக்கிறது.கடைசியாக நாசா அந்த சாதனையை செய்துவிட்டது என்றுதான் கூற வேண்டும், உலகமே எதிர்பார்த்துக் கொண்டு இருந்த இன்சைட் ரோபோட்டை அது செவ்வாய் கிரகத்தில் இறக்கிவிட்டது. நேற்று உலகம் முழுக்க இதை நாசா பக்கத்தில் மக்கள் லைவாக பார்த்துக் கொண்டு இருந்தனர்.

இனி இது செய்யப்போகும் ஆராய்ச்சிகள்தான் மனித உலகின் வரலாற்றை தீர்மானிக்க போகிறது. நாசா இன்சைட்டை செவ்வாயில் நிலை நிறுத்த 8 வருட உழைப்பை போட்டு உள்ளது.

6 மாதம் - 2 வருடம்
6 மாதம் முன், கடந்த மே மாதம் 5ம் தேதி செவ்வாயை நோக்கி, நாசா தனது இன்சைட் விண்கலத்தை அனுப்பியது. வேன்டென்பேர்க் ஏர்போர்ஸ் விமான மையத்தில் இருந்து இந்த விண்கலம் அனுப்பப்பட்டது. இது சரியாக 6 மாதங்கள் கழித்து இப்போதுதான் செவ்வாயில் களமிறங்கி உள்ளது. இது செவ்வாயில் இரண்டு வருடம் ஆராய்ச்சி செய்யும்.

எப்படி இறங்கியது
இன்சைட் தனது வேகத்தை செவ்வாய்க்கு செல்லும் முன் நிமிடத்திற்கு 205 மைல்கல் என்று குறைத்தது. செவ்வாயின் வளிமண்டலத்தில் நுழைந்த பின் 100 மைல்கல் என்று வேகம் குறைந்தது. அதன்பின் பாராசூட் திறக்கப்பட்டு, இன்னும் வேகம் குறைக்கப்பட்டு, கடைசியாக நிமிடத்திற்கு 0.08 மைல்கல் என்று மிக மெதுவாக சென்று செவ்வாயில் பத்திரமாக தரையிறங்கியது இன்சைட்.

மூன்று கட்டம் இது செவ்வாயில் மூன்று கட்டமாக தரையிறங்கியது. என்டர் - இதுதான் செவ்வாயின் வளிமண்டத்தில் நுழையும் கட்டம். உள்ளே நுழைந்தவுடன் இன்சைட் செவ்வாயின் வளிமண்டல உராய்வு காரணமாக பற்றி எரியும். ஆனால், அதில் உள்ள ஷீல்ட் உள்ளே உள்ள கருவிகளை காப்பாற்றும். இந்த நெருப்பு அணைந்த பின் அந்த ஷீல்ட் பிரிந்துவிடும். டிசன்ட் - இந்த கட்டத்தில் செவ்வாயில் இன்சைட் மெதுவாக இறங்கும். இப்போதுதான் பாராசூட் விரிக்கப்படும். இதில் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் குறைந்து, 205 மைல்கல்- 0.08 மைல்கல் என்ற வேகத்தை அடையும். இந்த நேரத்தில், செவ்வாயில் எந்த புள்ளியில் தரையிறங்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்படும். லேண்ட் - இதுதான் கடைசி கட்டம். இன்சைட் பாராசூட்டில் இருந்து கழன்று, பின் சிறிய எஞ்சின்கள் மூலம் மெதுவாக பறக்கும். அதன் உதவியுடன் சரியான புள்ளியில் தரையிறங்கும். அதேபோல் இதுவும் தரையிறங்கியது.

பரபரப்பு நிமிடம் இந்த மூன்று விஷயங்களும் நேற்று நடந்து முடிக்க 6.30 நிமிடங்கள் ஆனது. நாசா விஞ்ஞானிகள் இந்த 6.30 நிமிடமும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருந்தனர். ஒவ்வொரு நொடியும் அடுத்து என்ன நடக்கும் என்ன நடக்கும் என்று திகிலுடன் இருந்தனர்.

பீப் சத்தம் இன்சைட் தரையிறங்கி இரண்டு நிமிடம் கழித்து அது பூமிக்கு ஒரு பீப் சத்தத்தை அனுப்பியது. இதன் அர்த்தம், அது மிகவும் நல்ல நிலையில் இருக்கிறது என்பதாகும். அதன்பின் அது தனது பணியை தொடங்கியது. இது இனி அனுப்பும் தகவல்கள் எல்லாம் 8 நிமிடம் தாமதமாக பூமிக்கு வரும். பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையே இன்சைட் அனுப்பும் தகவல்கள் கடக்கும் தூரம் 146 மில்லியன் கிலோ மீட்டர் ஆகும்.

ஆராய்ச்சி செய்யும் இது செவ்வாயின் உட்பகுதியை ஆராய்ச்சி செய்யும். அதன் உட்புறம் எப்படி உள்ளது, அதன் வேதியியல் சேர்க்கை எப்படி இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்யும். இதனால் மனித வரலாற்றை தெரிந்து கொள்ள முடியும் என்று நாசா தெரிவிக்கிறது.

8வது தடை இதோடு நாசா வெற்றிகரமாக எட்டாவது முறை செவ்வாய் கிரகத்தில் தனது விண்கலம்அல்லது சோதனை கருவி ஒன்றை நிலை நிறுத்துகிறது. இதற்கு முன் வைகிங் 1, வைகிங் 2, பீனிக்ஸ், க்யூரியாசிட்டி, ஸ்பிரிட், மார்ஸ் பாத் பைண்டர், ஆபர்ஜுனிட்டி ஆகிய நாசாவின் கலன்கள் செவ்வாயில் இறங்கி இருக்கிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்