அகத்திக்கீரை உணவில் சேர்த்துக் கொள்வதால் பெறும் நன்மைகள்!

பர்கர், பிட்சா, சான்வேட்ஜ் என மாறிவரும் நமக்கு அகத்திக்கீரையின் பயன்கள் மறந்தே போய்விட்டது. முன்பெல்லாம், ரோட்டில் ஒரு பாட்டி கீரையை கூவி, கூவி விற்றுவருவார்கள். வீட்டில் அம்மாவும், பாட்டியும் தினமொரு கீரையை மதிய உணவில் சேர்த்து சமைப்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருந்தது. ஆனால் இன்று, கீரையும் காணவில்லை, விற்றுவந்த அந்த பாட்டியும் காணவில்லை அத்துடன் சேர்த்து நமது ஆரோக்கியமும் காணாமல் போய்விட்டது. 

அகத்திக்கீரை சிறந்த மருத்துவ குணங்கள் கொண்ட கீரையாகும். உடலுக்கு குளிர்சியளிக்கும் கீரையும் கூட. மேலும், மலச்சிக்கலை போக்கவல்ல சிறந்த ஆற்றல் நிறைந்தது அகத்திக்கீரை.... 


அகத்திக்கீரையை வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால், இரத்த கொதிப்பு ஏற்படாது. மலமிளக்க பிரச்னை! அகத்திக்கீரையை வாரம் ஒருமுறை உண்டு வந்தால், மலமிளக்க பிரச்சனைகள் ஏற்படாது. வாய்ப்புண்! அகத்திக்கீரை மற்றும் மணத்தக்காளி கீரை இரண்டையும் சமைத்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும். கண் நோய்! அகத்திக்கீரை சூப் வைத்து குடித்து வந்தால், கண் சார்ந்த பிரச்சனைகள் தீரும். மார்பு வலி! அகத்திக்கீரையை வெயிலில் காயவைத்து, பொடியாக்கி பாலில் கலந்து குடித்து வந்தால் மார்பு வலி குறையும். உடல் குளிர்ச்சி! உடல் குளிர்ச்சி அடைய அகத்திக்கீரை ஓர் சிறந்த உணவாகும். கண் எரிச்சல்! கண் எரிச்சல் குறைய, அகத்திக்கீரையுடன் பாசிப்பருப்பு சேர்த்து வேகவைத்து, தேங்காய் பால் பருகி வாருங்கள். குடல் புண்! குடல் புண்ணால் அவதிப்படும் நபர்கள் அகத்திக்கீரையை சாப்பிட்டு வர சிறந்த தீர்வு காண முடியும். தொண்டை வலி! தொண்டை வலிக்கு அகத்திக்கீரை ஓர் சிறந்த அருமருந்தாகும். அல்சர்! மதிய உணவில் அகத்திக்கீரை சேர்த்து உண்டு வந்தால் பித்தம் குறையும்.மேலும், வயிற்றுப் புண் சரியாகவும் அகத்திக்கீரை ஓர் சிறந்த உணவாகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்