Business

இன்றைய 21-பிப்-2019 விலை (சென்னை): பெட்ரோல் ரூ 73.87 (லி) | டீசல் ரூ 70.09 (லி) | தங்கம் விலை நிலவரம் : 22 காரட் 1கி ரூ 3,230 | 24 காரட் 1கி ரூ 3,513 | வெள்ளி விலை நிலவரம் : வெள்ளி 1 கிலோ ரூ 43,600 | டாலர் மதிப்பு 1$ = ரூ 71.05

நீண்ட ஆயுளுடன் வாழ சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவுகள் இதோ !

Image result for long aged strength food

வயது முதிர்வு என்பது இயற்கை. எல்லோருமே ஒரு நாள் வயது முதிர்ச்சியை சந்திக்க வேண்டியிருக்கும். அது தவிர்க்க முடியாததாகும். ஆனால் அந்த முதிர்ச்சி வரும்போது, கூன் விழுந்த முதுகும், பூ விழுந்த கண்களும் உங்களுக்கு இருந்தால் எப்படி இருக்கும் என்பதை நினைத்து பார்த்து கலக்கமுற்றதுண்டா? வயது ஒவ்வொரு நாளும் ஏறிக் கொண்டே இருக்கும். வயது அதிகரிக்க அதிகரிக்க, உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். ஆகவே அந்த மாற்றங்களுக்கு ஏற்ற வகையில், உடல் சிறப்பாக செயலாற்றும்படி, அதற்கேற்ற ஊட்டச்சத்துகளை கொடுப்பது நம் கடமை. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் ஆரோக்கிய வாழ்க்கை அறுபது வயதைக் கடந்தவர் கூட மிகவும் இளமையுடன் ஆற்றலுடன் சுறுசுறுப்பாக இயங்குவதை நாம் கண்டிருக்கலாம். உங்கள் சிந்தனை, செயல் மற்றும் உங்கள் உடலை நீங்கள் வழிபடும் முறை போன்றவற்றை பொறுத்தே உங்கள் ஆரோக்கிய வாழ்வு அமையும். உங்கள் வயது அதிகரிக்கும்போது, நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை கவனிப்பதே உங்கள் வாழ்க்கையின் முக்கிய கடமையாகிறது. உடல் செயல்பாடுகள் தாமதப்ப்படும்போது, மற்றும் உங்கள் வயிறு மிகவும் சென்சிடிவாக மாறும்போது எந்த நேரத்திலும் பிழை ஏற்படலாம். 50 வயதுக்கு மேல் 50 வயதைக் கடந்தவர்கள் சரியான உணவை தேர்ந்தெடுத்து உண்பதால் உண்டாகும் நன்மைகள் பல, அவை, வேகமான மீளுருவாக்கம் (மிகவும் இன்றியமையாதது), உயர் ஆற்றல் அளவு, நாட்பட்ட நோய்களுக்கான மேம்பட்ட மேலாண்மை போன்றவையாகும். "நீங்கள் உண்ணும் உணவு தான் நீங்கள் எப்படி இருகிறீர்கள் என்பதன் அடையாளம்" என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். 

வயது முதிர்வால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் 1. உடற்பயிற்சி எதுவும் இல்லாமல் வளர்சிதை மாற்றம் தாமதப்படுகிறது. 2. மூத்த குடிமக்கள் தாங்கள் எடுத்துக் கொள்ளும் உணவை ஜீரணிக்க குறைந்த உடல் திரவங்களை உற்பத்தி செய்கின்றனர். இந்த மாற்றத்தால் ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி 12 போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உங்கள் உடல் கடினமானதாக இருக்கிறது. 3. சில வயோதிகர்கள் தனிமையாகவும் மன அழுத்தங்களோடும் எப்போதும் காணப்படுவார்கள். அவர்களுக்கு சாப்பிடுவதில் ஈர்ப்பு இருக்காது. அதனால் எடை குறையும். அல்லது மற்றொரு பக்கம், இந்த அளவுக்கு மீறிய உணர்ச்சிகளின் ஊக்குவிப்பு, அதிக உணவை உண்ணும் உணர்வைத் தந்து எடை அதிகரிக்கும் வாய்ப்பும் உண்டாகலாம். மூளைக்கு சூப்பர் உணவுகள் இந்த உணவுகள் மூளை செயல்பாட்டை அதிகரித்து, மூளை தொடர்பான கோளாறுகளான அல்சைமர், பர்கின்சன் நோய் போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்கின்றன. அத்தகைய உணவுப் பட்டியல் இதோ உங்களுக்காக. 


சால்மன் சால்மன் என்பது குளிர்ந்த நீரில் இருக்கும் மீன் வகையாகும். இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் உள்ளது. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியம் மற்றும் மூளை செயல்பாடுகளுக்கு மிகவும் நன்மை தருபவையாக உள்ளன. இளமையாக தோன்றுவதற்கான அஸ்டக்சந்தின் என்னும் ரசாயனம் இதில் உள்ளது. வைட்டமின் ஈ மற்றும் டி சத்துகளின் ஆதாரமாக இந்த மீன் உள்ளது. பாதாம் மூளையின் உணவு என்று அனைவராலும் அழைக்கப்படுவது பாதாம். இது உண்மை தான். இது உங்களுக்கு அதிக சக்தி தருகிறது மற்றும் அசிட்டில்கோலின் எனப்படும் நரம்பியக்கடத்தலுக்கு முன்னோடியாக இருக்கும் 'கொலைன்' கொண்டிருக்கிறது. கனோலா எண்ணெய் சூரிய காந்தி என்னிக்கு மாற்றாக கனோலா எண்ணெய்யை சமையலில் பயன்படுத்துவதால், ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் உட்கொள்ளல் அதிகமாகும். ஆல்பா லினோலிக் அமிலம் மற்றும் லினோலிக் அமிலம் என்ற இரண்டு வகை கொழுப்பு அமிலங்கள் கனோலா எண்ணெயில் மிகவும் அதிகமாக உள்ளன. இதில் முதல் வகை ஒமேகா 3 கொழுப்பு அமில வகை ஆகும். இது கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதால், பக்கவாதம் மற்றும் மாரடைப்பை தடுக்கிறது. பின்னர் கூறியது, ஒமேகா 6 கொழுப்பு அமில வகையாகும். 


கைக்குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சிக்கு இந்த அமிலம் மிகவும் அவசியமாகும். முட்டை முட்டையில் கொலைன் உள்ளது. கவனம் அதிகரிக்கவும், மன அழுத்தத்தை நிர்வகிக்கவும் இது தேவைப்படுகிறது. அவகாடோ கொழுப்பு அதிகம் உள்ள பழம் என்று அவகாடோவை வகைப்படுத்தினாலும் ஊட்டச்சத்துகளைப் பொறுத்தவரையில் இது மிகவும் உயர்ந்த பழமாக போற்றப்படுகிறது. மூளைக்கு செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும்போது வாதம் உண்டாகிறது. அவகாடோவில் உள்ள சில குறிப்பிட்ட ஊட்டச்சத்துகள், வாதம் உண்டாகும் அபாயத்தைக் குறைப்பதாக கூறப்படுகிறது. வாழைப்பழத்தில் இருப்பதை விட அதிக அளவு பொட்டாசியம் அவகாடோவில் உள்ளது. மட்டி மீன் மட்டியில் அதிக அளவு வைடமின் பி 12, மெக்னீசியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் உள்ளன. 


மூளை செயல்பாடுகளுக்கு இந்த ஊட்டச்சத்து மற்றும் கனிமங்கள் மிகவும் அவசியமாகின்றன. பற்கள் ஆரோக்கியத்திற்கு சூப்பர் உணவுகள் வாயில் இருந்து வெளிப்படும் புன்னகை பற்கள் இருப்பதால் மட்டுமே பூரனமாகின்றது. எளிதாக உணவருந்த மற்றும் உணவு ஜீரணிக்க வலிமையான பற்கள் மிகவும் அவசியம். பற்களின் வலிமைக்கும் பற்குழியிலிருந்து பற்களை பாதுகாக்கவும் கீழே குறிப்பிட்டுள்ள உணவுகள் நமக்கு உதவுகின்றன. அவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம். பசலைக் கீரை பசலைக் கீரை மெக்னீசியத்தின் ஆதாரமாக உள்ளது. மெக்னீசியம் பற்களின் எனாமலை கடினமாக்கி பற்கள் அழுகுவதிலிருந்து தடுக்கிறது. பச்சை ப்ரோகோலி ப்ரோகோலியில் மெக்னீசியம் அதிகமாக இருப்பதால் ஆரோக்கியமான் பற்கள் பெற ப்ரோகோலியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments