ஜீவாமிர்தம் தயாரிப்பு பற்றியது.


தேவையான பொருட்கள்:

10 கிலோ சாணம் 


5 லிட்டர் கோமியம் 


2 கிலோ பயறுமாவு


3 கிலோ நாட்டுச் சக்கரை 


இத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.

இவைகள் தேவையான பொருட்கள். சரிதானுங்களே.

இப்படி 200 லிட்டர் தாயார் செய்ய ஆகும் செலவு கணக்கு:

முதல் இரண்டும் நமக்கு செலவில்லாமல் 

கிடைக்கும். 

பயறு மாவு 2 கிலோ ₹200/

சர்க்கரை 2கிலோ ₹100/

ஆக நமது கையில் இருந்து வெளியே செல்லும் பணம் ₹300/

Zero budget ல் இது ஓரு சவால் தானே!

இந்த செலவை குறைக்க முடியுமா என பார்க்கலாம்.பனம்பழம், பப்பாளி இரண்டும் இதற்கு மாற்றாக பயன்படுத்தலாம். 

இப்போது பனம்பழம் சீசன். சேகரித்து வையுங்கள். 

எப்போதும் 10 பப்பாளி மரங்கள் காய்ப்பில் இருக்கும் படியாக வளர்ப்பது தேவையான பழங்களை கிடைக்கும் படியாக அமையும்.பாசன வாய்க்கால் ஓரம் 10 கரும்பு நடவு செய்யுங்கள். வளரும் கரும்பை வெட்டி பிளந்து போட்டும் சர்க்கரை தேவையை பூர்த்தி செய்யலாம்.

நம்மிடம் இருந்து outgoing cash ஐ தக்கவைக்கலாம்.

பழங்கள் அதிகம் இருந்தால் ஓரு டிரம்மில் போட்டு நீர் விட்டு வையுங்கள். அந்த நீரை ஜீவாமிர்தம் தயாரிப்பில் பயன்படுத்தலாம்.

நான் இப்படிதான் செய்கிறேன்.

வாழ்த்துகள் .

பெரிய டிரம்மில் ஜீவாமிர்தம்,

சிறிது பழங்களை ஊறவிட்டிருக்கும் டிரம்.


ஜீவாமிர்தம் தயாரிப்பு பற்றியது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்