தமிழ் லைவ்
தமிழ் வாழ்க!!!

இன்றைய ராசிபலன்கள் - 31.12.2017




♈ மேஷம் :

புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். சாதுர்யமான பேச்சுகளால் இலாபம் அடைவீர்கள். நண்பர்களின் உதவியால் மனமகிழ்ச்சி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. வழக்குகளில் சாதகமான சூழல் அமையாது.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

அசுவினி : நட்பு கிடைக்கும்.
பரணி : பேச்சுகளால் இலாபம் அடைவீர்கள்.
கிருத்திகை : உறவுகள் மேம்படும்.

♉ ரிஷபம் :

புதிய எண்ணங்களுக்கு செயல்திட்டம் தீட்டி அதனை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு திறமையை வெளிப்படுத்துவதற்கு சாதகமான சூழல் அமையும். இளைய உடன்பிறப்புகளால் நன்மை உண்டாகும். மகான்களின் ஆசிகள் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.
ரோகிணி : காரிய சித்தி உண்டாகும்.
மிருகசீரிடம் : ஜெயம் உண்டாகும்.

♊ மிதுனம் :

அந்நியர்களிடம் பேசும்போது கவனம் தேவை. நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். புதிய ஆடைகளை வாங்குவீர்கள். புனித யாத்திரை செல்வதற்கான செயல் திட்டத்தை தீட்டுவீர்கள். பயணங்களால் இலாபம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மிருகசீரிடம் : பேச்சில் கவனம் தேவை.
திருவாதிரை : கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள்.
புனர்பூசம் : பயணங்களால் இலாபம் ஏற்படும்.

♋ கடகம் :

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் புதிய உறுப்பினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். புத்திரர்களால் சுப செய்திகள் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : கல்வியில் மேன்மை உண்டாகும்.
பூசம் : ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
ஆயில்யம் : உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

♌ சிம்மம் :

விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். காது சம்பந்தப்பட்ட உபாதைகள் சரியாகும். குறுகிய தூர பயணங்களால் மாற்றம் உண்டாகும். செய்தொழிலின் மேன்மைக்கான புதிய யுக்திகளை கையாளுவீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். செயல்பாடுகளில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.
பூரம் : பயணங்களால் மாற்றம் உண்டாகும்.
உத்திரம் : வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும்.

♍ கன்னி :

விவாதங்களில் சாதகமான சூழலால் வெற்றி கிடைக்கும். சமூக சேவை புரிபவர்களுக்கு புகழ் ஏற்படும். வாகன யோகம் உண்டாகும். கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கு இலாபம் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : தேன் நிறம்

உத்திரம் : பாராட்டப்படுவீர்கள்.
அஸ்தம் : விவாதங்களில் மேன்மை உண்டாகும்.
சித்திரை : புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

♍ துலாம் :

வெளிநாட்டு தொழில் முயற்சிகளால் இலாபம் அதிகரிக்கும். சுயதொழில் புரிபவர்களுக்கு ஏற்பட்ட பண சிக்கல்கள் தீரும். தலைமைப் பதவியில் உள்ளவர்கள் கவனத்துடன் செயல்படவும். தொழில் அலைச்சல்களால் சுப செய்திகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

சித்திரை : முயற்சிகளால் இலாபம் உண்டாகும்.
சுவாதி : பண சிக்கல் நீங்கும்.
விசாகம் : சுப செய்திகள் வரும்.

♍ விருச்சகம் :

அறப்பணிகளால் புகழ் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வசதி வாய்ப்புகளால் மகிழ்ச்சி ஏற்படும். உயர் பதவியில் இருப்பவர்களிடமிருந்து சாதகமான செய்திகள் வரும். ஞான உபதேசங்களால் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

விசாகம் : புகழ் உண்டாகும்.
அனுஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.
கேட்டை : உபதேசங்களால் இலாபம் அடைவீர்கள்.

♍ தனுசு :

அலைச்சல்களால் சாதகமான சூழல் அமையும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். பொருட்களை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். தொழிலில் தேக்கநிலை உண்டாகும். புதிய கலைகளை கற்க ஆர்வம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

மூலம் : சாதகமான சூழல் அமையும்.
பூராடம் : நிதானம் தேவை.
உத்திராடம் : பயணங்களில் கவனம் தேவை.

♍ மகரம் :

மனதில் காதல் எண்ணங்கள் தோன்றும். புண்ணிய காரியங்களால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலில் கூட்டாளிகளுக்கு இடையேயான மனக்கசப்பு குறையும். பழைய நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திராடம் : நற்பேறு உண்டாகும்.
திருவோணம் : மனக்கசப்பு குறையும்.
அவிட்டம் : பதவி உயர்வால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

♍ கும்பம் :

திடீர் யோகத்தால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். அரசு அதிகாரிகளிடமிருந்து அனுகூலமான செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆகாய மார்க்க செய்திகளால் ஆதாயம் உண்டாகும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அவிட்டம் : திடீர் யோகம் உண்டாகும்.
சதயம் : பயணங்களால் ஆதாயம் ஏற்படும்.
பூரட்டாதி : வெற்றி கிடைக்கும்.

♍ மீனம் :

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் நன்மை உண்டாகும். நண்பர்களுடன் இணைந்து செய்யும் புதிய செயலால் தனலாபம் உண்டாகும். முயற்சிகள் ஈடேறக்கூடிய அனுகூலமான நாள். பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் வரும். பயணங்களில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

பூரட்டாதி : செயல்பாடுகளில் கவனம் தேவை.
உத்திரட்டாதி : தனலாபம் உண்டாகும்.
ரேவதி : எண்ணங்கள் ஈடேறும்.






No comments