புதிய பதிவுகள்

பழங்கால மல்யுத்த வீரர்களின் உணவு இது... தமிழகத்தில் மீண்டும் வெள்ளை மிளகு சம்பா!

வெள்ளை மிளகு சம்பா பாரம்பர்ய நெல் வகைகளில் ஒன்றாகும். இது சற்றே வித்தியாசமாக உருண்டை வடிவத்தில் காணப்படும் நெல் வகை. பார்ப்பதற்கு மிளகுபோல இருப்பதால், மிளகு சம்பா என அழைக்கப்படுகிறது.

சம்பா
இவ்வகை, வெண்ணிறமான சன்ன ரக அரிசியைக் கொண்டது. 130 நாள் வயதுடைய இந்த ரக நெல், உயரமான பகுதியில் விளையக்கூடியது. நேரடி விதைப்புக்கும்,மற்றும் நடவு முறைக்கு மிகவும் ஏற்றது. தமிழகத்தில் பரவலாகப் பயிர் செய்யப்பட்டுவரும் இவ்வகை நெல்லுக்கு, எந்த ரசாயன உரங்களும் தேவையற்றது என்பது கூடுதல் சிறப்பு. ஒற்றை நாற்று முறையில் (திருந்திய நெல் சாகுபடி முறையில்) நடவு செய்யும்போது, அதிக தூர் வெளிவந்து அதிகபட்சம் ஏக்கருக்கு 25 மூட்டைக்கும் மேல் மகசூலாகக் கிடைக்கும். 



மிளகு சம்பா நெல்லின் அரிசி, அதிக மருத்துவக் குணம் கொண்டது. இந்த நெல்லின் அரிசியில் வடித்த கஞ்சி, பசியைத் தூண்டவும் மற்றும் தலைவலியைப் போக்கும் தன்மையைக் கொண்டது. வாதம் போன்ற பலவிதமான நோயைப் போக்கி உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. பழங்காலத்தில் மல்யுத்த வீரர்கள் இதை உண்டு வலிமை பெற்றுள்ளனர் எனக் கூறப்படுகிறது.


இந்த நெல் ரகங்களைப் பாரம்பர்ய ரக நெல் விதைக்கும் விவசாயிகள் பரவலாக விதைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பொதுவாக மேட்டுப் பாங்கான பகுதிகளில் விளையும் வெள்ளை மிளகு சம்பா, சமவெளிப் பகுதிகளிலும் விளைய ஆரம்பித்திருக்கிறது.


நன்றி விகடன் !

No comments