புதிய பதிவுகள்

ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நர்மதா கண்ட்ரோல் அத்தாரிட்டி (என்சிஏ) நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : நர்மதா கண்ட்ரோல் அத்தாரிட்டி (என்சிஏ) மேலாண்மை : மத்திய அரசு பணி : இளநிலை பொறியாளர் மொத்த காலிப் பணியிடம் : 06 கல்வித் தகுதி : பொறியியல் துறையில் டிப்ளமோ பி.இ மின்சாரத்துறையில் பி.இ பொறியியல் வயது வரம்பு : 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும் ஊதியம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை தேர்வு முறை : தகுதிப் பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://nca.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 15.02.2019-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://nca.gov.in/vacancy-nca/vac-2018/vac-je-civil-elect-oct-18-eng.pdf அல்லது http://nca.gov.in/Vacancy.htm என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

No comments