புதிய பதிவுகள்

பொடுகை நீக்க.. .Natural remedies to remove dandruff


பொடுகைப் போக்க வேப்பம்பூ: 
Image result for Neem flowers
 

 
தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு வேப்பம்பூ பயன்படுகிறது.  இது கோடை காலம் ஆகையால் வேப்பம்பூ (Neem flowers) அதிகம் கிடைக்கும். நூறுகிராம் அளவுள்ள வேப்பம்பூவை , இருநூறு கிராம் தேங்காய் எண்ணையுடன் (Coconut Oil) கலந்து நன்கு காய்ச்சி எடுக்க வேண்டும். 
காய்ச்சிய எண்ணெய் இளம் சூடாக இருக்கும்பொழுது எடுத்து தலையில் நன்கு தேய்த்து ஊறவைக்கவும். 

அரைமணி நேரம் கழித்து தலைக்கு குளியுங்கள்.
தொடர்ந்து வாரத்திற்கு மூன்று முறை இவ்வாறு வேப்பம்பூ கலந்த எண்ணையைத் தேய்த்து குளித்துவர, உங்களைப் பாடாய் படுத்திய பொடுகு தொல்லை போயே போய்விடும். 
எளிமையான இந்த இயற்கை வைத்தியத்தைப் பயன்படுத்தி பொடுகு தொல்லையை தவிர்த்திடுங்கள். 
 
பொடுகை போக்க மற்றொரு முறை: 

Image result for henna leaves
 
மருதாணி இலையை (henna leaves) ஒரு கப் எடுத்துக்கொண்டு, அதனுடன் வெந்தயம் (fenugreek seeds), வேப்பிலை (Neem leaves), துளசி (Tulsi), சீயக்காய்  (Soap nut) ஆகியவற்றைக் கலந்து நன்கு அரைத்துக்கொள்ளவும். 
அரைத்த கலவையுடன் ஒரு எலுமிச்சைப் பழத்தை இரண்டாக நறுக்கி அரை எலுமிச்சை பழச்சாற்றை (Lemon juice) அக்கலவையுடன் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். 
எலுமிச்சைபழச் சாறுக்கு பதில் தயிரையும் (Curd) இதற்குப் பயன்படுத்தலாம். 
நன்கு கலக்கப்பட்ட கலைவை தலையில் பூசி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தலைக்கு நன்கு அலசி குளிக்கவும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மாத காலம் செய்துவர  பொடுகு தொல்லை போயே போய்விடும். இக்கலைவையைப் பயன்படுத்துவதால் தலைமுடியும் ‘கருகரு’வென நன்கு வளரும். 

No comments