புதிய பதிவுகள்

ஜிலேபியின் வரலாறு..!!

உலகளவில் ஜிலேபி

ஜிலேபியை சாப்பிட தெரியும்... ஆனால் அதன் வரலாறு தெரியுமா..??
ஜீராவில் ஊறி மிதக்கும் ஜிலேபியை பார்க்கும் போது யாருக்குத்தான் வாய் ஊறாது? இந்தியர்களின் இன்றையமையாத இனிப்பு உணவாக மாறிவிட்ட ஜிலேபியை குறித்த வரலாற்றை இந்த பக்கத்தில் அறிய உள்ளோம்.


ஜிலேபி இந்திய உணவு அல்ல
அரேபிய மொழியின் ’ஜுலேபியா’ என்ற வார்த்தையிலிருந்து தான் ‘ஜிலேபி’ என்ற வார்த்தை உருவானது. வியாபார நிமித்தமாக இந்தியாவிற்கு வந்த பாரசீகர்கள் நமக்கு அளித்த பரிசு தான் ஜிலேபி.


ஜிலேபியின் பரிணாமம்
500 ஆண்டுகள் பழமையான இனிப்பாக ‘ஜிலேபியை’ பலர் கூறுகின்றனர். இந்தியாவில் பொதுவாக மைதா மாவில் செய்யப்படும் ஜிலேப்பிக்கள் தான் அதிகம். எனினும் மக்களுக்கு ஏற்றவாறு ஊர்களுக்கு ஏற்ப உளுந்து, அரிசி, கோதுமை போன்ற மாவுகளிலும் ஜிலேபி தயாரிக்கும் முறைகள் வழக்கத்தில் உள்ளன.

ஜிலேபிக்கு உள்ள பெயர்கள்
அதேபோல மக்கள் பேசும் மொழிக்கு ஏற்ப பல்வேறு பெயர்களில் ஜிலேபி இந்தியாவில் அறியப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஜலேபி, ஜில்ப்பி, ஜிலப்பி, ஜீலேப்பி, ஜிலபிர் பாக், இம்ரதி, ஜாங்கிரி போன்ற பெயர்கள் பிரபலமானவை.

ஜிலேபியின் தலைநகர்
இந்தியாவில் இனிப்புக்களின் நகரமாக கொல்கத்தா அறியப்பட்டாலும், ஜிலேபி என்றால் அது டெல்லி தான். டெல்லியில் சாலையோர கடை முதல் ஏசி உணவகங்கள் வரை ஜிலேபி எல்லா இடங்களிலும் கிடைக்கும்.

உலகளவில் ஜிலேபி
மேற்கு ஆசியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த ஜிலேபி மேற்கு ஆசியா, வட ஆஃப்ரிக்கா மற்றும் கிழக்கு ஆஃபிரிக்காவிலும் பிரபல இனிப்பு உணவாக இருந்து வருகிறது.


ஜிலேபியை சாப்பிடும் முறை
இதை சூடாகவும் சாப்பிடலாம், அல்லது ஜீராவில் ஊறப்போட்டு ஆறிய பிறகும் சாப்பிடலாம். மேலும் ஜீராவில் ஊறும் ஜிலேபியில் சிறிது எலுமிச்சை சாறு அல்லது பன்னீரை சேர்த்து சாப்பிட்டால் சுவை தூக்கலாக இருக்கும்.

அப்போது முதல் தற்போது வரை
வரலாற்று ஆய்வாளர்களிடம் கிடைத்த 10ம் நூற்றாண்டு, 13ம் நூற்றாண்டுகளை சேர்ந்த குறிப்புகளில் ஜிலேபியின் செய்முறை வடிவம் உள்ளது. அப்போதே இதை பழங்கால மக்கள் பல்வேறு பெயர்களில் குறிப்பிட்டுள்ளனர்.

ஜிலேபி செய்யும் முறை
மைதா மாவில் நீர்விட்டு குழை மாவாக்கி அந்த மாவைக் காய்ந்த எண்ணையில் வட்டவடிவில் பிழிந்து பொறித்து, அதைச் சர்கரைப் பாகில் இட்டு எடுத்து ஜிலேபி செய்யப்படுகிறது.

No comments