புதிய பதிவுகள்

ஒரே ஒரு ஏல‌க்காய்..கீழ்க்காணும் நோய்கள் குணமாகும் !



Image result for ஏல‌க்காய்

ஒரே ஒரு ஏல‌க்காயை எடுத்து வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று வருபவர்களுக்கு கீழ்க்காணும் நோய்கள் குணமாகும்


எனக்கு ப‌சியே இல்லை அதனால் சா‌ப்‌பிடவும் ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று சில கூறுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், கேட்டிருப்பீர்க ள். அவர்கள் என்ன‍ செய்ய வேண்டுமென்றால் தினந் தோறும் ஒரே ஒரு ஏல‌க்காயை எடுத்து வா‌யி‌ல் போ‌ ட்டுமெ‌ன்றா‌ல், நல்ல‍ப‌சி எடு‌க்கும், நன்றாக உணவை யும் சாப்பிடுவர். இதனால் ஜீரண உறு‌ப்பு‌க‌ள் அனைத் தும் சீராக இயங்கி, உணவை செரிமானம் ஆகும்.


மேலும் நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல், அடி‌க்கடி வரும் வறட்டு இருமலால் உண்டாகும் வ‌யி‌ற்றுவலிக்கு கூட இந்த ஏல‌க்கா‌ய் ஒரு அருமருந்து என்றால் அது மிகையல்ல‍. அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஏல‌க்காயை நீங்களும் மெ‌ன்று சா‌ப்‌பி‌டலாமே!
மருத்துவகுணங்கள்
  • குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும், வாந்தி உடனே நின்று விடும்.
  • சிகரெட் பிடிக்கும் எண்ணம் வரும்போதெல்லாம், ஒரு ஏலக்காயினை வாயிலிட்டுச் சுவைக்க, புகைக்கும் எண்ணம் விலகும்.
  • ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.
  • ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு 5 ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்து போல் போட்டால் தலைவலி, சளி விலகும்.
  • மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், ஏலக்காய் டீ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும் போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.
  • நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.
  • ஏலக்காய்த்தூளை அடித்தொண்டை அழற்சி, தொண்டைக்கட்டு, உள்நாக்கில் வலி, குளிர்காய்ச்சலால் ஏற்படும் தொண்டைக்கட்டு முதலியவற்றைக் குணப்படுத்தி ஏலக்காயும், இலவங்கப்பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.
  • வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.
  • ஏலத்தை பொடியாக்கி துளசிச் சாற்றுடன் கலந்து உட்கொண்டால் வாந்தி நிற்கும்.
  • விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.
  • வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.
  • மலட்டு தன்மை மற்றும் அரைகுறை விந்து வெளிப்படுதலை தீர்ப்பதற்கும். ஏலக்காய், ஆண்மைக் குறைவு, பெண்மைக் குறைவும் நீக்கி குழந்தைப் பாக்கியமும் உண்டாக்க வல்லது.

No comments