புதிய பதிவுகள்

நீங்கள் இதுவரை அறியாத சுவையான ஃப லாஃபெல் ரெசிபி!

நீங்கள் இதுவரை அறியாத சுவையான ஃபலாஃபெல் ரெசிபி!


         நீங்கள் இதுவரை அதிகமாக கேள்விப்படாத ஆனால் மிகவும் எளிமையாக சமைக்கக் கூடிய சுவையான ஃபலாஃபெல் ரெசிபி எப்படி நம் வீட்டிலேயே சமைக்கலாம் என்பதை இந்த புகைப்படத் தொகுப்பில் பார்க்கலாம்…


தேவையானவை!
கொண்டைக்கடலை - ஒரு கப், பார்ஸ்லே - அரை கட்டு, கொத்தமல்லி தழை - ஒரு மேசைக்கரண்டி, சீரகம் - ஒரு தேக்கரண்டி, பூண்டு - 4 இதழ், கொத்தமல்லி பொடி - ஒரு தேக்கரண்டி, மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி, உப்பு – தேவைக்கு..


செய்முறை!
கொண்டைக்கடலையை எட்டு மணிநேரம் ஊற வைக்கவும்.

பார்ஸ்லே மற்றும் கொத்தமல்லி தழையை நறுக்கி ஊறிய கொண்டைக்கடலையுடன் கலந்து கொள்ளவும். அதனுடன் பொடி வகைகள், பூண்டு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் இந்த கலவையை போட்டு வடைக்கு அரைப்பது போல் கரகரவென அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த கலவையுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து வடை போல் சுட்டு எடுக்கவும்.

ஃபலாஃபெல் ரெசிபி!
வெளிநாடுகளில் கூபூஸ் என்னும் ரொட்டியுடன் இதை வைத்து சாப்பிடுவார்கள். நாம் மசால் வடை போல் தேநீருடன் சாப்பிடலாம்.


No comments