ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் - 'ஜியோபோன் 2' ஸ்மார்ட் பீச்சர் போனை அறிமுகப்படுத்தியுள்ளது ! - Tamil Live
தமிழ் லைவ்
வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!

Kotak General Insurance [CPL] IN

News

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் - 'ஜியோபோன் 2' ஸ்மார்ட் பீச்சர் போனை அறிமுகப்படுத்தியுள்ளது !


TataCliq [CPS] IN
இந்திய தொலைத்தொடர்பு சந்தையில், தனது ஜியோ போன் மூலம் பெரும் அதிர்வை ஏற்படுத்திய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அடுத்தகட்டமாக மேம்பட்ட வசதிகள் கொண்ட புதிய 'ஜியோபோன் 2' ஸ்மார்ட் பீச்சர் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. க்வெர்டி கீபேட், நான்கு வழி நேவிகேஷன், மற்றும் கூடுதல் வசதிகள் கொண்ட இந்த போன், வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும்.
'கை' இயங்குதளத்தில் செயல்படும் ஜியோபோன் 2, 512 எம்.பி., ரேம், 4 ஜி.பி., போன் ஸ்டோரேஜ் மெமரி, 128 ஜி.பி., வரை நீட்டிக்கக் கூடிய எஸ்.டி., கார்ட் வசதி, 2.4 இஞ்ச் திரை உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது. மேலும், 2 எம்.பி., பின்புற கேமரா மற்றும் வி.ஜி.ஏ., செல்பி கேமரா கொண்டுள்ளது. 4ஜி, வோல்ட்இ அலைவரிசைகளில் செயல்படும் டூயல் சிம் வசதி, புளுடூத், ஜி.பி.எஸ்., என்.எப்.எஸ்., அம்சங்களும் இடம்பெற்றிருக்கும் இந்த போனில் நீடித்து நிற்கும், 2000 எம்ஏஹெச் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சமாக வழக்கமான ஜியோ செயலிகளுடன், அத்தியாவசிய தேவைகளாகிவிட்ட பேஸ்புக், வாட்ஸ்ஆப், யுடியூப், மேப், கூகுள் அசிஸ்டென்ட் உள்ளிட்ட செயலிகளும் கொடுக்கப்பட்டுள்ளதால், ஒரு ஸ்மார்ட்போனுக்கு இணையானதாக, 'ஜியோபோன் 2' உருவாகியுள்ளது.
ரூ.2,999/-*

No comments