தமிழ் லைவ்
தமிழ் வாழ்க!!!

கஞ்சிக்குடித்து ஏர்கலப்பை பிடித்து உழுதவன் யாரும் டிரெட்மில் கண்டதில்லை

பண்டைய காலத்தில் #கஞ்சி ஒரு மிக முக்கியமான உணவு பொருளாக இருந்துள்ளது. #விவசாயி-களின் ஆரோக்கியத்தின் ஆணிவேர் கஞ்சி.

கஞ்சிக்குடித்து ஏர்கலப்பை பிடித்து உழுதவன் யாரும் டிரெட்மில் கண்டதில்லை.
ஒருவரின் உடல் ஆரோக்கியத்திற்கு கஞ்சி மிக முக்கியமான பானம் ஆகும். இது உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும் பெருமளவு உதவுகிறது.

#கம்மங்கஞ்சி !
இரண்டு நாட்கள் உணவு உண்ணாமல் இருந்தவன் கூட ஒரு டம்ளர் கம்மங்கஞ்சி குடித்தால் சுறுசுறுப்பாகி விடுவான்.

#உளுத்தங்கஞ்சி !
பருவமடைந்த பெண்களுக்கு உளுத்தங்கஞ்சி கொடுக்க வேண்டும். இது அவர்களது மாதவிடாய் சுழற்சியை சீராக்கும்.

கஞ்சி!
காய்ச்சல் வந்தால் வெறும் கஞ்சி கொடுத்தால் போதும்' உடல் தானாக சுறுசுறுப்பாகிவிடும். தாய் பால் ஊட்ட முடியாத பெண்கள் இதை குழந்தைகளுக்கு கொடுத்தால் சத்து பெறும்.

#நொய்க்கஞ்சி !
வயதானவர்கள், நோய் வாய்ப்பட்டவர்களுக்கு அரிசி அல்லது நொய்க்கஞ்சி கொடுப்பது நமது வழக்கமாக இருந்து வந்தது. கஞ்சி வெறும் உணவல்ல மருந்தும் கூட.

#நார்ச்சத்து !
கஞ்சியில் உள்ள நார்ச்சத்து மலமிளக்க பிரச்சனைகளை தீர்க்கும். செரிமான மண்டலத்தை வலுவாக்கும். மலச்சிக்கல் இல்லாமல் நிம்மதியை காலைக்கடன் கழிக்க உதவும்.

#வயிற்றுப்போக்கு !
வயிற்றுபோக்கு உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து கஞ்சித்தண்ணி தான். இதை மருத்துவர்களே பரிந்துரை செய்கின்றனர்.

Image may contain: food

No comments