சர்க்கரை நோய் - Tamil Live

Breaking

ads

ads

Tuesday, 12 December 2017

சர்க்கரை நோய்


#சர்க்கரை நோய் பிறந்த குழந்தைக்கே இந்நோய் உள்ளது. இது ஒரு பரம்பரை நோய் என்று தவறாக மக்கள் மத்தியில் பரப்படுகின்றது.
நீங்களே சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்கள் தாத்தா, பாட்டி சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார்களா? அல்லது உங்கள் பெற்றோரை கேளுங்கள் அவர்களுடைய தாத்தா, பாட்டி இந்நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தாருகளா? என்றல் இல்லை என்ற ஒரே பதில் மட்டுமே நமக்கு கிடைக்கப்பெறும்.

சர்க்கரை என்பது பரம்பரை நோயா ? என்றால் இல்லை என்ற பதிலே கிடைக்கும்.

சித்த மருத்துவத்தில் 24 வகையான சர்க்கரை நோய் உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. இதனை சித்த மருத்துவத்தில் மதுமேகம் என்று அழைக்கின்றனர். மது என்றால் இனிப்பு என்று அர்த்தம்.

#சர்க்கரைநோய் வீட்டு வைத்தியம்
இரண்டு டம்ளர் தண்ணீரில் 5 நித்யகல்யாணி மலர் இதழ்களை போட்டு அத்துடன் சிறிது மிளகு தூளை சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து, அறை டம்ளராக தண்ணீர் சுண்டும் வரை கொதிக்கவைத்து. அதனை காலை மாலை இருவேளை வெறும் வயிற்றில் அருந்தி வர #சர்க்கரை_நோய் குறைந்து, கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.

குறிப்பு: உணவிற்கு பிறகு நாம் துவர்ப்பு சுவையை சேர்த்துக்கொள்ள வேண்டும் அப்போது தான் உடல் சர்க்கரை நோய் இல்லாமல் இருக்கும்.

கொஞ்சமாய் துவர்ப்புச் சுவையுடைய கோவைக்காயில் பொரியல், வற்றல், கூட்டு, சாம்பார் செய்து உணவில் சேர்த்துக் கொள்வதுண்டு.மற்றும் கோவைக்காய் பச்சடி சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு.
தினமும் 50 கிராம் சமைத்த #கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும் என்று ஒரு ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது

மற்றும் #பாகற்காய், வேப்பிலைச்சாறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அடிக்கடி சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு குறைந்துவிடுகிறது என்று சாப்பிட்ட பலர் கூறுகிறார்கள்.

நாக்கு சுவையை மட்டுமே கருதாமல் உடல் நலத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டால் எல்லா உணவுகளுமே விருப்ப முடையதாகத்தான் ஆகும். இதனைப் பொதுவாக எல்லோருமே சாப்பிடலாம்.

சர்க்கரை நோய் இன்று மரபு பழக்கவழக்கங்கள் மாறுப்பாட்டினால் ஏற்படுகின்றது. அது மட்டுமில்லாமல் கார்ப்ரேட் நிறுவனங்களும் செயற்கையான முறையில் இந்த நோயை உறுவாக்கின்றனர். அதைப்பற்றி முழுமையாக அடுத்ததோர் பதிவில் விரிவாகவும் தெளிவாகவும் கூறுகின்றேன்.

Image may contain: food

No comments:

ads