புதிய பதிவுகள்

தென்னையில் ஏற்படும் பிரத்தியேக பிரச்சனைகள்

 தென்னையில் ஏற்படும் பிரத்தியேக பிரச்சனைகள்


1. வளர்ந்த தென்னந்தோப்புகளை புதுப்பித்தல்
பெரும்பான்மையான தோப்புகளின் குறைந்த காரணங்கள் அதிக எண்ணிக்கையிலான  மரங்கள் மற்றும் உரம், நீர்  ஆகியன சரிவர கிடைக்கப்பெறாததேயாகும். இந்தத் தோப்புகளை கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் மேம்படுத்தலாம்.
அ. அடர்ந்த தோப்புகளில் மரங்களின் எண்ணிக்கையை குறைத்தல்
அதிக எண்ணிக்கையில் மரங்கள் நடப்பட்டுள்ள விவசாயிகளின் நிலத்தில் பல மரங்கள் வருடத்திற்கு இருபதிற்கும் குறைவான காய்களையே தருகின்றன. இவ்வகை வெட்டி அப்புறப்படுத்தவதன் மூலம் மகசூலை அரிகரிக்கலாம். இதனால் சாகுபடி செலவை மிச்சப்படுத்துவதோடு நிகல லாபத்தையும் அதிகரிக்கலாம். குறைந்த மகசூல் கொடுக்கும் மரங்களை அப்புறப்படுத்தியபின் ஒரு எக்டருக்கு 175 மரங்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும்.
ஆ. போதுமான அளவு உரம் மற்றும் நீர் அளித்தல்
பரிந்துரை செய்யப்பட்ட உரம் +நீர்+சாகுபடி முறைகளை பின்பற்றுவதன் மூலம் தென்னந்தோப்புகளின் மகசூலை அதிகரிக்கலாம்.
2. பென்சில் முனை குறைபாடு
நுண்ணூட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக நுனிப்பகுதி சூம்பிப் போய், இலைகளின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படும். இலையின் அளவும்  பெருமளவில் குறைந்து இலைகள் வெளுத்த மஞ்சள் நிறத்தில் காணப்படும். பரிந்துரைக்கபட்ட உரங்களோடு போராக்ஸ், துத்தநாக சல்பேட்டு, மெக்னீசியம் சல்பேட், தாமிர சல்பேட் ஆகிய ஒவ்வொன்றும் 225 கிராம் அளவும் மற்றும் அம்மோனியம் மாலிப்டேட் 10 கிராம் அளவும் எடுத்து 10 லிட்டர் நீரில் கரைத்து 1.8 மீட்டர் அரை வட்டப்பாத்திகளில் ஊற்றவேண்டும். ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் இந்தக்குறைபாட்டை சரி செய்துவிடலாம். மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மரங்களை அப்புறப்படுத்திவிட்டு அந்த இடங்களில் புதிய நாற்றுக்களை நடவு செய்யலாம்.
3. குரும்பை உதிர்தல்

No comments