இயற்கை முறை கொசு ஒழிப்பு - Tamil Live

Breaking

ads

ads

Monday, 25 December 2017

இயற்கை முறை கொசு ஒழிப்பு

வீடுகளில் நம்மை கடித்து குதறி பல நோய்களை பரப்பும் கொசுவிற்கு பயந்து நாம் தினமும் ரசாயன  பூச்சி கொல்லிகளை பயன் படுத்துகிறோம். Allout, Goodnight, Bayer, Mortein போன்ற பல பெயர்களில் வரும் இவை மிகவும் சக்தி வாய்ந்த ரசாயனங்கள். (Alletherin, prallethrin)
இவை தினமும் வீட்டில் போடுவதற்காக டிசைன் செய்ய பட்டவை அல்ல. எப்போதாவது மேற்கத்திய நாடுகளில் மழை காலங்களில் மட்டுமே பயன் படுத்துவர். நாமோ, தினமும் இவற்றை பயன் படுத்துகிறோம். இப்படி செய்தால் ஆஸ்த்மா, மூச்சிறைப்பு போன்ற நோய்கள் வரலாம்.  சிறுவர்கள்,வயதானவர்கள் பாதிக்க பட சாத்தியகூறுகள் அதிகம்.
இந்த நிலையில், நம் நாட்டில் எளிதாக கிடைக்கும் இலைகளை கொன்று இயற்கை முறையில் கொசு விரட்டு முறையை பற்றிய ஒரு தகவல்…
இயற்கை முறை கொசு ஒழிப்பு
தமிழகத்தில் முதன்முறையாக டெங்கு, மலேரியா நோய்களை பரப்பும் முதிர் கொசுக்களை ஒழிக்கும், ‘இயற்கை முறை கொசு ஒழிப்பு திட்டம்’ திண்டுக்கல்லில் அறிமுகமாகியுள்ளது.
மாநில நகராட்சி நிர்வாக இயக்குனர் பிரகாஷ் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு இயற்கை முறை சுகாதார திட்டங்கள் நடைமுறைப்படுத்த வலியுறுத்தினார். இதன் அடிப்படையில் தமிழகத்திலுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளில், பள்ளி குழந்தைகள், கல்லுாரி மாணவ – மாணவிகள், பொதுமக்களுக்கு ‘நிலவேம்பு கஷாயம் வழங்குதல், இயற்கை முறை கொசு ஒழிப்பு’ உள்ளிட்ட திட்டங்கள் அறிமுகமாயின.
ஆனால், இயற்கை முறை கொசு ஒழிப்பு முறை எங்கும் துவங்கவில்லை.
மாநிலத்திலேயே முதன் முறையாக ‘இயற்கை முறை கொசு ஒழிப்பு திட்டம்’ நேற்று திண்டுக்கல்லில் துவங்கியது. நொச்சித்தழை, வேப்பந்தழை, சாம்பிராணி உள்ளிட்டவை மூலம் இயற்கை முறையில் புகை மூட்டம் போட்டு கொசுக்களை விரட்டினர். ‘நாக் அவுட்’ பாய்ஷன் (மூச்சுத்திணறி மயக்கமடைந்து இறக்க செய்தல்) எனப்படும் இம்முறையில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களை பரப்பும் முதிர் கொசுக்கள் முற்றிலும் அழிந்துவிடும். திண்டுக்கல் மாநகராட்சியில் 200 துப்புரவு ஊழியர்களோடு, 18 சுகாதார ஆய்வாளர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.நகர்நல அலுவலர் டாக்டர் அனிதா கூறியதாவது:  நம் மூதாதையர்கள் வீட்டில் நொச்சி, வேப்பந்தழைகளை கிருமி நாசினியாக பயன்படுத்தினர். அந்த முறை தற்போது பயன்பாட்டில் இல்லை. இதை செயல்படுத்த மாநில நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. எனவே தெருத்தெருவாக, வீடு வீடாக, இத்திட்டம் செயல்படுத்தடப்படுகிறது, என்றார்.
நன்றி: தினமலர்

No comments:

ads