புதிய பதிவுகள்

சனிப் பெயர்ச்சிசனி பகவான் தனுசு இராசிக்கு திருக்கணித பஞ்சாகத்தின்படி ஐப்பசி 10ஆம் (27-10-2017) தேதியும், வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்கழி 4ஆம் (19-12-2017) தேதியும் இடம்பெயர்கிறார். தற்போது கொடுக்கப்பட்ட பலன்கள் திருக்கணித முறைப்படி நடந்த பெயர்ச்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேஷம் :

முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாக கொண்ட மேஷ ராசி அன்பர்களே! இதுவரை கடந்த மூன்று வருட காலமாக அஷ்டம சனியால் பல விதமான இன்னல்களை கொடுத்து, பலரின் சுப ரூபத்தை உங்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய சனி பகவான் உங்களின் ராசிக்கு ஒன்றாம் இடத்திற்கு இன்று செல்கிறார். ஆதலால் சோதனைகள் அனைத்தும் சாதனைகளாக்கி மகிழ்வீர்கள். இனி வரும் காலங்களில் உங்களின் முயற்சிகளில் நல்ல, சிறப்பான முன்னேற்றங்களை காண்பீர்கள். கர்ம வினைப்படி தாங்கள் அனுபவிக்க வேண்டிய சுபபலன்களை வாரி வழங்குவார். திரிகோணம் ஏறிய கிரகங்கள் நன்மையை செய்யும் என்ற வாக்கிற்கு ஏற்ப இந்த சனிப்பெயர்ச்சி மிகச்சிறந்த பலன்களை தரும்.

மாணவர்களுக்கு :

இதுவரை கல்வியில் ஏற்பட்ட மந்த நிலை மாறும். பாடங்கள் நன்கு புரியும். மறதிகள் ஏற்படாது. புத்துணர்வு பெறுவீர்கள். தொழிற்கல்வி பயில்வோருக்கு உடனடியாக வேலைவாய்ப்புகள் அமையும். இவ்வருடம் முழுவதும் குரு பார்வை உங்களின் ராசிக்கு இருப்பதால் சோதனைகளை சாதனைகளாக்குவீர்கள்.

விளையாட்டு துறையினருக்கு :

உடல் பலத்தை காட்டி, பல விதமான கடினமான பயிற்சிகளில் ஈடுபட்டும் வெற்றி காணமுடியாமல் ஏக்கத்தில் தவிப்பவர்களுக்கு இனிமேல் பொற்காலமே ஆகும். விளையாட்டில் வெற்றி பெற்று முதலிடம் பெறுவீர்கள். வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

பெண்களுக்கு :

கருத்து வேறுபாடு காரணமாக பிரிவில் உள்ளவர்கள், பெரியவர்களின் ஆலோசனைப்படி சேர வாய்ப்புகள் அமையும். வழக்குகளில் சுமூகத் தீர்வை காண்பீர்கள். புகுந்த வீட்டில் பழிக்கு ஆளாகிய நீங்கள் புகழ் பெறுவீர்கள். உங்களின் செயல்களால் மற்றவர் மனங்களில் இடம் பெறுவீர்கள்.

வியாபாரிகளுக்கு :

கமிஷன் சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு சிறப்பான காலம் இது. எண்ணெய், ஏஜென்சீஸ், உற்பத்தி செய்யாத தொழில்களுக்கு சிறப்பான காலமிது. வெளிநாட்டு ஏற்றுமதி, இறக்குமதி தொழில்களில் லாபம் கூடும். வாராக்கடன்கள் வந்து சேரும். புதிய தொழில் அமையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு :

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடப்பெயர்ச்சி மூலம் உயர்வு ஏற்படும். மேலதிகாரிகளிடம் நற்பெயர் ஏற்படும். பாராட்டப்படுவீர்கள்.

கலைஞர்களுக்கு :

சிறப்பான பொற்காலமாகும். விருது பெறுவீர்கள். புகழ் பல விதங்களிலும் பரவும். வெளியு+ர் மற்றும் வெளி நாடுகளில் கலை நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்புகள் அதிகம்.

பொதுவாக இதுவரை ஏற்பட்டு வந்த திருமண தடைகள் விலகி திருமண யோகம் கூடும். புத்திர பாக்கியம் தடைபட்டவர்களுக்கு புத்திர யோகம் உண்டாகும். பொதுவாக அனைத்து தரப்பினருக்கும் நல்ல சுப பலன்களை அள்ளி தரக்கூடியதாக இந்த சனிப்பெயர்ச்சி அமைகிறது.

பரிகாரம் :

பிள்ளையார் பட்டி சென்று, அபிஷேக ஆராதனைகள் செய்து, வழிபட்டு வரவும்.

ரிஷபம் :

கற்பனை திறன் அதிகம் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே! இதுவரை கண்டக சனியாக 7ஆம் இடத்தில் இருந்து வந்த சனிபகவான் தற்போது இடம் மாறி, எட்டாம் இடத்திற்கு சென்று அஷ்டம சனியாக மாறுகிறார். இதுவரை உடல் நலம் மற்றும் மனநலம் ஆகியவை ஒருங்கே பாதிக்கப்பட்டிருக்கும். இனிமேல் அந்த நிலைமாறி உடல் ஆரோக்கியம் பெறுவீர்கள். மனதில் புத்துணர்வு ஏற்படும். எட்டாம் இடம் என்பது எதிர்கால திட்டங்களைத் தீட்டும் இடமாகும். ஆகவே அஷ்டம சனியாக சனிபகவான் புதிய தொழில் திட்டங்களை உருவாக்கி, வழிவகுத்துக் கொடுப்பார். உங்களின் ராசிக்கு தர்மகர்மாதிபதியாகிய சனிபகவான் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தமாட்டார். வாகன பயணங்களில் எச்சரிக்கையுடன் செல்வது அவசியமாகும். வீண் பழிகளுக்கு ஆளாகாமல் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது சிறப்பு. புதிய வழக்கு ஒன்றை சந்திக்க நேரிடும்.

மாணவர்களுக்கு :

படிப்பில் சற்று அதிக அக்கறை காட்டுவது அவசியம். பாடங்களை திரும்ப திரும்ப படிப்பதன் மூலமும், எழுதுவதன் மூலமும் நல்ல மதிப்பெண் பெறலாம். கடின உழைப்பை விரும்புபவர் சனிபகவான்.

விளையாட்டு துறையினருக்கு :

விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற கடின உழைப்பை காட்ட வேண்டும். புதிய யுக்திகளை கையாள்வதன் மூலம் வெற்றி பெறலாம். விளையாட்டு பயிற்சியில் ஈடுபடும் போது விழிப்புடன் செயல்பட வேண்டும். விபத்திற்கு வாய்ப்புண்டு.

பெண்களுக்கு :

இதுவரை கணவனிடம் அதிகமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கும், ஒரு சிலருக்கு பிரிவினையும் கொடுத்திருக்கும். இனிமேல் கணவன் - மனைவி உறவு பலப்படும். பெண்கள் குடும்பத்தில் அமைதியைக் காக்க விட்டுக்கொடுத்து செல்வது அவசியமாகும். கணவரின் பொருளாதார உயர்விற்கு உதவியாக இருப்பீர்கள்.

வியாபாரிகளுக்கு :

தொழிலில் சற்று மந்த நிலையும், தேக்க நிலையையும் காண்பீர்கள். தொழிலில் புதிய யுக்திகளை கையாள்வதன் மூலம் வெற்றி பெறுவீர்கள். தொழில் சார்ந்து அலைச்சல் அதிகமாகும். கமிஷன் சம்மந்தமான தொழில் சிறப்பை தரும். வேலையாட்களிடம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். கண்காணிப்பை அதிகப்படுத்துவது அவசியம். கழிவு பொருட்கள் மூலம் லாபத்தை பெறலாம். வெளிநாட்டு பயணங்களின் மூலம் சற்று ஆறுதல் ஏற்படும்.

பரிகாரம் :

நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயரை மாதம் இருமுறையேனும் சென்று வணங்கி வரவும். அவருக்கு வெற்றிலை மாலை சாற்றுவதால் வேதனைகளை குறைத்துக் கொள்ளலாம். தினமும் ராம ஜெயம் எழுதுவது நற்பலனை தரும், உள்ளுhரில் இருக்கும் ஆஞ்சநேயரை சனிக்கிழமைகளில் தீபமேற்றி, வழிபட வெற்றிபெறலாம்.

மிதுனம் :

புதிய மாற்றங்களை விரும்பும் மிதுன ராசி அன்பர்களே! இதுவரை ராசிக்கு ஆறாமிடத்தில் இருந்த சனிபகவான் இன்று முதல் 7வது ராசியில் சஞ்சரிக்கிறார். இதனை கண்டக சனி என்று கூறுவார்கள். சனி பகவானின் பார்வை கெடுபலன்களை தரும் என்பது பொதுவிதியாகும். இருப்பினும் குருவின் சிறப்பு பார்வையான 5 ஆம் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் பாதிப்புகள் குறையும். மேலும் சனிபகவான் 10 ஆம் பார்வையாக நான்காம் பாவகத்தையும், 3 ஆம் பார்வையாக ஒன்பதாம் இடத்தையும் பார்ப்பதால், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளிவட்டாரங்களில் உள்ள புகழுக்கு பங்கம் ஏற்படக்கூடிய சு+ழல் உருவாகும். எச்சரிக்கையுடன் செயல்படுவதால், நிம்மதி பெறலாம். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பு+ர்வீக சொத்துக்களில் பாகப்பிரிவினை இழுபறி நிலையை கொடுக்கும். வீடு கட்டும் பணியை துவங்கியவர்களுக்கு பல சிக்கல்கள் ஏற்படும். திருமண முயற்சிகள் தாமதப்படும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலை உண்டாக்கும்.

மாணவர்களுக்கு :

உடலில் எதிர்ப்பு சக்தி குறையும். படிப்பில் ஞாபக மறதி ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உயர்கல்வி பயில்பவர்களுக்கு மறதி ஏற்படும். அதிக கவனம் செலுத்தி படிக்கவும்.

பெண்களுக்கு :

அமைதியை கடைபிடித்தாலும், வாதங்களை தவிர்ப்பதாலும் குடும்ப ஒற்றுமையை ஏற்படுத்தலாம். தந்தையின் தலையீட்டை குடும்ப விவகாரங்களில் தவிர்த்தல் சிறப்பு. இடுப்பு பகுதிகளில் வலி ஏற்படும். மாதாந்திர தொந்தரவுகள் உண்டாகும்.

விளையாட்டுத்துறை :

விளையாட்டுத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு சற்று மத்திம பலனையே தரும். முயற்சிகளை அதிகப்படுத்துவதன் மூலம் வெற்றி பெறலாம்.

வியாபாரிகளுக்கு :

குலத் தொழிலோ, பு+ர்வீக சொத்தில் செய்யும் தொழிலோ சிறப்பான பலனை தரும். கூட்டு தொழில் லாபம் தரும். சோம்பல் தன்மை அதிகரிக்கும். தொழில் வகை அலைச்சல் அதிகமாகும். உடல் நலனில் அக்கறை தேவை. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். நுரையீரல் மற்றும் சுவாசம் சார்ந்த உபாதைகளால் அவஸ்தை ஏற்படும். கால்நடைகளால் பாதிப்பு ஏற்படும்.

உத்தியோகஸ்தர்களுக்கு :

லோன் போட்டு வீடு, வாகனம், கால்நடைகள் வாங்கும் யோகம் ஏற்படும். சுகம் கெடும். அலைச்சல் அதிகமாகும். சிலருக்கு பணி பாதிப்புகளால் மன உளைச்சல் ஏற்படும். பணியிறக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. எச்சரிக்கை அவசியம்.

கலைஞர்களுக்கு :

நியாயமாக கிடைக்க வேண்டிய வெகுமதிகள் தள்ளிப்போகும். சற்று பொறுமையுடன் மறுபடியும் முயற்சிகளை மேற்கொள்வதால் பதவிகள் கிட்டும். மன குழப்பங்கள் மிகுதியாகும். தன்னம்பிக்கை குறையும்.

பரிகாரம் :

திருக்கொள்ளிக்காட்டில் உள்ள குடும்பத்துடன் கூடிய சனி பகவானை நீங்களும் குடும்பத்துடன் சென்று வழிபடுவதால் குடும்ப ஒற்றுமை, ஆரோக்கியம், தொழில் முன்னேற்றம் ஆகியவை சிறக்கும். மேலும் உள்ளுhரில் உள்ள சிவாலயத்திற்கு சனிக்கிழமைகளில் சென்று சிவனையும், சனி பகவானையும் தீபமேற்றி வழிபடுவது நற்பலன்களை தரும்.

கடகம் :

ஒருங்கிணைப்பு குணம் கொண்ட கடக ராசி அன்பர்களே! இதுவரை இராசிக்கு 5 ஆம் வீட்டில் இருந்த சனிபகவான் தற்போது பெயர்ச்சியாகி ஆறாம் வீட்டிற்கு செல்கிறார். இதுவரை பு+ர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் மாறி, சுமூகமான முறையில் தீர்வு ஏற்படும். பிள்ளைகள் வழியில் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் மாறும். மனதிடம் கூடும். இறைவழிபாட்டில் ஞான திருஷ்டி பெற இது ஏதுவான காலமாகும். பாவிகள் ஆறில் மறைவதால் வெற்றி நிச்சயம் என்ற விதியின் படி கடன்களை முழுமையாக அடைப்பதற்கான சு+ழல் உருவாகும். எதிரிகள் உங்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அமைதி அடைவார்கள். உங்களின் முயற்சியில் திடீர் யோகம் பெறுவீர்கள். அதாவது லாட்டரி, புதையல், காப்பீட்டு தொகை போன்றவற்றால் திடீர் தனலாபம் உண்டாகும். உடல் நலம் சீரடையும், உறவினர்களிடம் நெருக்கம் அதிகமாகும். தடைப்பட்டு வந்த குலதெய்வ வழிபாடு சிறப்படையும். மன சஞ்சலத்தை தியானத்தால் வெற்றி கொள்வீர்கள். வெற்றிகள் உறுதிப்படும். வீட்டில் உள்ள மனம் கவர்ந்த, விலையுயர்ந்த பொருளை தவற விடுவீர்கள்.

மாணவர்களுக்கு :

மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் ஏற்படும். உயர்கல்வியில் சிறப்படைவார்கள். படிப்பில் முதலிடம் பெறுவார்கள். தந்தையின் உதவிகள் அதிகரிக்கும்.

விளையாட்டு துறையினருக்கு :

விளையாட்டு துறையில் வெற்றிகளை குவிக்கும் காலமிது. கடினமான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். தூக்கம் கெடும். சுகம் பாதிக்கப்படும். வெளியு+ர், வெளிநாட்டு பயணங்களால் அனுகூலங்கள் ஏற்படும். சிலருக்கு வேலை வாய்ப்புகள் அமையும்.

பெண்களுக்கு :

கணவரின் உடல் நலனில் அக்கறை தேவை. கணவர் வழியில் மருத்துவ செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் உங்களின் புகழ் ஓங்கும் காலமிது. வேலைக்கு விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு வேலை அமையும். சுப விரயம் ஏற்படும். மாமன், மைத்துனர் உறவில் கவனம் தேவை. பேச்சில் எச்சரிக்கை தேவை.

வியாபாரிகளுக்கு :

கடன் வாங்கி தொழில் முன்னேற்றத்தை அதிகரிப்பீர்கள். தேக்கநிலை மாறி, வியாபாரம் அமோக வெற்றி நடைபோடும். தொழிலுக்கு தேவையான பழைய கருவிகளை வாங்குவீர்கள். தொழில் வகை லாபங்கள் சிறப்பாகும். வேலைச்சுமை அதிகரிக்கும். சரியான சாப்பாடு மற்றும் தூக்கமின்றி தொழிலை நிலை நிறுத்த பாடுபடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு :

பணியில் இடமாற்றம் ஏற்படும். இடமாற்றமும், அனுகூல பலனை தரும். உங்களின் புதிய முயற்சி பலரின் பாராட்டை பெற்றுத் தரும். பரிசுப் பொருட்களின் மூலம் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். புது வீடு வாங்கும் அமைப்பு உருவாகும். உங்களை எதிர்ப்பவர்கள் ஓடி விடுவார்கள். வெற்றிக்கொடி நாட்டுவீர்கள். சிறப்பான தருணம்.

கலைஞர்களுக்கு :

பாராட்டப்படுவீர்கள். வெகுமதிகளால் களிப்புறுவீர்கள். நீண்ட கால கனவுகள் நிறைவேறும். புதிய வகை யுக்திகளால் அதிர்ஷ்டம் ஏற்படும்.

பரிகாரம் :

சர்ப்பங்கள் மற்றும் காவல் தெய்வங்களை வழிபடுவதால் அனைத்து விதமான அனுகூலங்களையும் பெறலாம். பொங்கலிட்டு வழிபாடு செய்வது மிகுந்த சிறப்பை தரும்.

சிம்மம் :

தியாக மனம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே! இதுவரை இராசிக்கு நான்காம் இடத்தில் நின்று அர்த்தாஷ்டம சனியாக வலம் வந்த சனிபகவான் இனிமேல் ஐந்தாம் இராசிக்கு மாறி, சிறப்பான பலன்களை வாரி வழங்க உள்ளார். உடல் நலம் சீரடையும், வாகனம் சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் மாறி, நன்மை விளையும். தொழில் வகை லாபம் கூடும். பிள்ளைகள் வழியில் அமைதியை கடைபிடிக்கவும். பு+ர்வீக சொத்துக்களின் மூலம் கடன் பெறும் வாய்ப்புகள் அமையும். பு+ர்வீகச் சொத்துக்களை பங்காளிகளுக்கு பங்கிட்டு கொடுக்கும் வாய்ப்புகளும் அமையும். புத்திரபாக்கியத்தை எதிர் நோக்குபவர்களுக்கு சற்று தாமதப்படும். காதலிப்பவர்களுக்கு காதல் கனியும், திருமணமாக முடியும். திருமண முயற்சிகள் நற்பலனை தரும். குடும்ப உறுப்பினர்களிடம் அமைதியை காப்பது அவசியம். வாக்குறுதிகளை தவிர்ப்பது சிறப்பு. இடுப்பு எலும்புகளில் பலவீனம் உண்டாகும். வாயினால் பல பிரச்சனைகள் உருவாகும். எச்சரிக்கையுடன் பேசவும்.

மாணவர்களுக்கு :

கல்வியில் இருந்து வந்த மந்த நிலை மாறும். சிறப்பிடம் பெறுவீர்கள். அடிப்படை கல்வி பயில்பவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும். நண்பர்களிடம் அதிக நெருக்கத்தை தவிர்ப்பதால் அனுகூலங்களை பெறலாம். புதிய நட்புகள் அமையும். பழைய நட்பு காதலாக மாறும்.

விளையாட்டு துறையினருக்கு :

சிறப்பான காலம், நல்ல பயிற்சியும், சிறந்த முயற்சியும் சாதனையாளனாக மாற்றும். வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். வெளியு+ர் பயணம் நன்மை தரும்.

வியாபாரிகளுக்கு :

கூட்டு தொழில் முயற்சி கைகொடுக்கும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். சேமிப்புகளை கொண்டு தொழில் முதலீட்டை அதிகரிப்பீர்கள். தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் குறையும். மூத்த சகோதிரர் ஒருவர் தொழிலுக்கு உதவியாக வருவார். அவர்களை தவிர்ப்பதால் பிற்காலத்தில் நன்மைகள் ஏற்படும்.

பெண்களுக்கு :

இடுப்பு எலும்பில் தேய்மானம் ஏற்படும். மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படும் காலமிது. கணவரிடம் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். அமைதியை கையாள்வது அவசியம். அந்தரங்க விசயங்களை வெளி நபர்களிடம் சொல்ல வேண்டாம். ரகசியங்கள் காக்கப்பட வேண்டிய காலமிது.

உத்தியோகஸ்தர்களுக்கு :

இடமாற்றம் ஏற்படும். வேலைப்பழு அதிகரிக்கும். மேலதிகாரிகளிடம் நற்பெயர் பெறுவீர்கள். திருமண யோகம் ஏற்படும். புது வித யுக்திகளை கையாள்வதன் மூலம் பாராட்டு பெறுவீர்கள்.

கலைஞர்களுக்கு :

கலைஞர்கள் பாராட்டபடுவீர்கள். கலைகள் புத்துயிர் பெறும். வெளியீர் பயணங்களால் சேமிப்புகள் கரையும். நண்பர்களால் அனுகூலம் பெறுவீர்கள். மூத்தோர்களின் ஆதரவால் சிறப்படைவீர்கள்.

பரிகாரம் :

திருப்பைஞ்சீலி சென்று சனிபகவானின் அதி தேவதையான எமதர்ம ராஜாவை வழிபட்டு வருவதால் வாழ்வில் வளம் பெறலாம். தீபம் ஏற்றி வழிபாடு செய்வது அவசியம்.

கன்னி :

நுண்ணறிவு மிக்க கன்னி ராசி அன்பர்களே! இதுவரை உங்களின் ராசிக்கு 3 ஆம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் இன்று முதல் நான்காம் இடத்தில் அர்த்தாஷ்டம சனியாக சஞ்சாரம் செய்யப் போகிறார். இதன் காரணமாக உடல் ஆரோக்கியம் கெடும். நெருங்கிய உறவினர்களிடம் வருத்தங்களும், பிரிவினைகளும் ஏற்படும். உடலில் சோம்பல் தன்மையும், மந்தத் தன்மையும் உருவாகும். செயல்பாடுகளில் தோய்வு நிலை காணப்படும். கால்நடைகளை வளர்ப்பவர்கள், அவற்றை கண்ணும் கருத்துமாகப் பாதுகாக்க வேண்டும். கட்டிய வீட்டின் மேல் கடன் வாங்குவீர்கள் அல்லது கடன் வாங்கி புது வீடு வாங்கும் வாய்ப்பு அமையும். தாயிடம் கருத்து வேறுபாடு தோன்றும். புதிய கடன் உருவாகும். அதனை சுபமாக மாற்றிக் கொள்ளலாம். நீண்ட கால கடன்களை அடைப்பீர்கள். செயல்களில் சுறுசுறுப்பு இல்லாமல் வேகம் குறையும். உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டிய காலம் இது.

மாணவர்களுக்கு :

உயர்கல்வி பயிலும் மாணவர்கள் அதிக அக்கறை செலுத்தி படிக்க வேண்டும். ஏனெனில் மறதி ஏற்படும். ஆகவே, பயிற்சியை அதிகப்படுத்தவும். இரவில் அதிக நேரம் கண்விழித்துப் படிப்பதை தவிர்த்து ஓய்வெடுத்துப் படிக்கவும்.

விளையாட்டு துறையினருக்கு :

பயிற்சிகளின்போது தக்க பாதுகாப்பு சாதனங்களைப் பயன்படுத்திக் கொள்வது அவசியமாகும். காலில் அடிபடும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே, எச்சரிக்கை தேவை. வேலை தேடுவோருக்கு உடனடி வேலை வாய்ப்புகள் அமையும்.

பெண்களுக்கு :

தந்தைவழி உறவினர்களிடம் கவனமுடன் பழகவும். கொடுக்கல் - வாங்கலில் கணக்குகளை சரிபார்ப்பது அவசியம். புதிய வாகன யோகம் உண்டாகும். பழைய கடனை அடைத்து புதிய கடனை ஏற்படுத்தி கொள்வீர்கள்.

வியாபாரிகளுக்கு :

அலைச்சல் அதிகமாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். ஒரே நிறுவனத்திற்கு அதிக வியாபாரம் செய்யாமல் வியாபாரத்தை பரவலாக்குவதன் மூலம் பண தேக்க நிலையை சமாளிக்கலாம். லாபங்களை புதிய சொத்துகளில் முதலீடு செய்யவும். கடன் இருக்க வேண்டும். கடன் வாங்கி புதிய முதலீடுகளை உருவாக்குவீர்கள். கடன் அதிகமாகாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு :

வேலை வேண்டி விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு விரைவில் வேலை வாய்ப்பு அமையும். சோம்பலை கைவிட்டு முயற்சிகளை துரிதப்படுத்தவும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் கூடும். மற்றொரு தொழிலை உருவாக்குவீர்கள்.

கலைஞர்களுக்கு :

சாகச நிகழ்ச்சிகளை நடத்தும்போது தக்க பாதுகாப்புடன் செயல்படவும். வெளிவட்டாரத்தில் உங்களின் புகழ் அதிகரிக்கும். வருமான நிலை சிறப்படையும். தொழில் வகை முன்னேற்றம் உண்டு. வேலைக்கு ஆட்களை வைத்து, புதிய அணி உருவாக்கி, தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள். முயற்சி திருவினையாக்கும் என்பதற்கேற்ப முயற்சியை அதிகப்படுத்தி, நல்லவிதமான அணுகுமுறையால் வெற்றி காண்பீர்கள். இதுவரை யாரும் செய்யாத யுக்திகளை தொழிலில் கொண்டு வந்து புரட்சி செய்வீர்கள்.

பரிகாரம் :

பிரதி மாதம் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை ஏகாதசி திதிகளில் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி, நெய் தீபமேற்றி அர்ச்சனை செய்து வழிபடவும். தினமும் தன்வந்திரி காயத்ரியை பாராயணம் செய்வது அவசியமாகும்.

துலாம் :

மற்றவர்களின் எண்ணங்களை எளிதில் புரிந்து கொள்ளும் துலாம் ராசி அன்பர்களே! இதுவரை ஏழரை ஆண்டுகள் உங்களுக்கு கடுமையான சோதனைகளை கொடுத்து, அடுத்தவர்களின் சுய உருவத்தை உணர வைத்து, வாழ்க்கைப் பாடத்தில் பல புதிய அனுபவங்களை போதித்து, மனதளவில் உங்களை காயப்படுத்திய சனிபகவான் இன்றுமுதல் மூன்றாம் ராசியில் சஞ்சாரம் செய்வதால் ஏழரை சனி பு+ரணமாக விலகுகிறது. ஆகவே, இதுவரை சந்தித்த சோதனை மாறி சாதனைகளை கொடுத்த சனிபகவானே, உங்களை சாதனையாளராக மாற்றப் போகிறார். இனிமேல் தொட்டதெல்லாம் பொன்னாகும். அனைத்து காரியங்களும் சுப பலனை தரும். வெற்றி வாய்ப்புகள் குவியும். தாய் பற்றிய கவலைகள் நீங்கும். எதிர்காலம் கருதி பல திட்டங்களை செயலாக்குவீர்கள். திருமண யோகம் கைகூடும். புத்திர பாக்கியத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு சந்தான பிராப்தி ஏற்படும். பு+ர்வீக சொத்துக்களை உருமாற்றம் செய்து ஆதாயம் பெறுவீர்கள். வெளியு+ர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பொது நலத் தொண்டில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வாய்ப்புகள் அமையும்.

மாணவர்களுக்கு :

படிப்பில் முதலிடம் பிடிப்பீர்கள். கல்வி முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். புதிய ஆசிரியர்களின் வருகையால் புத்துணர்வு பெறுவீர்கள். படிப்பில் புதிய அணுகுமுறைகளை கையாண்டு வெற்றி பெறுவீர்கள். பிற மொழி பாடங்கள் விரைவில் புரியும். சிறப்பான காலம் இது.

விளையாட்டு துறையினருக்கு :

கடின உழைப்பின் மூலம் வெற்றிகளை குவிப்பீர்கள். இதுவரை கை நழுவிப்போன வாய்ப்புகள் தேடி வரும். வெளியு+ர் பயணங்கள் வெற்றி தரும். பிரபலமானவர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய பயிற்சியாளர் வருகை நற்பலன்களை தரும்.

பெண்களுக்கு :

தாய்வீடு பற்றிய கவலைகள் மேலோங்கும். புத்திர பாக்கியம் அடைவீர்கள். வரன் தேடுபவர்களுக்கு திருமண யோகம் கைகூடும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். குடும்ப பெரியோர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தந்தையின் வேலை, வாரிசு அடிப்படையில் அமையும். தடைப்பட்ட செயல்கள் அனைத்தும் சுபமாக நிறைவேறும்.

வியாபாரிகளுக்கு :

பு+ரணமாக ஏழரை சனி விலகியது. தொழிலில் ஏற்பட்ட தேக்க நிலை மாறி புத்துணர்வு பெறுவீர்கள். தந்தையின் உதவி கிடைக்கும். நண்பர்களின் மூலம் புதிய தொழில் முயற்சி செய்வீர்கள். ஏஜெண்டு, கமிஷன் சம்மந்தப்பட்ட தொழில் வெற்றி தரும். தொழிலில் புதிய யுக்திகளின் மூலம் சிறப்பான பலன் அமையும்(புதிய உத்திகளை கையாளவும்). மனைவியின் ஒத்துழைப்பு பு+ரணமாக கிடைக்கும். உங்களின் பேச்சிற்கு மதிப்பு மிகும். மற்றவர்களின் பார்வையில் வெற்றியாளராக திகழ்வீர்கள். அலைச்சல் தரும் தொழிலால் அனுகூலம் பெறுவீர்கள். பெரியோர் ஒருவரின் ஆலோசனை தொழில் வெற்றிக்கு நற்பலனை தரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு :

பயணங்கள் அதிகமாகும். இடப்பெயர்ச்சி ஏற்படும். உயர் அதிகாரிகளால் கௌரவிக்கப்படுவீர்கள். உங்களின் திறமைகள் வெளிவட்டாரங்களில் புகழை பெற்றுத் தரும். இறை உணர்வு மேலோங்கும். நண்பர்களின் மூலம் புதிய தொழில் துவங்குவீர்கள். மனைவியின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கலைஞர்களுக்கு :

ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி பயணிப்பீர்கள். நீண்ட கால கனவுகள் நிறைவேறும். மனதில் தீட்டிய திட்டங்களை செயலாக்குவீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். பெரியோர்கள் அல்லது அரசியல் பிரமுகர்களின் உதவியால் வெளிநாட்டில் மேடை ஏறுவீர்கள்.

பரிகாரம் :

சொர்ண ஆகர்ஷன பைரவரை வணங்குவதன் மூலம் உங்களின் முயற்சிக்கு தக்க வரவேற்பு கிடைக்கும். தன, தான்ய, லாபம் ஏற்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் பைரவரை வழிபட வேண்டும். குறிப்பாக ராகு நேரத்தில் வழிபட்டால் நற்பலன்களை வாரி வழங்குவார்.

விருச்சகம் :

வேகம் நிறைந்த விருச்சக ராசி அன்பர்களே ! இதுவரை ஜென்ம சனியாக கடந்த மூன்று வருடமாக பட்ட அவஸ்தைகளுக்கு மருந்திடும் வகையில், இராசிக்கு 2ல் சனிபகவான் பாதச்சனியாக இனி வலம் வர இருக்கின்றார். ஆகவே, வாக்கில் கடுமையை குறைத்துக் கொள்வது அவசியம். வாக்குறுதிகளை யாருக்கும் கொடுக்க வேண்டும். ஜாமீனுக்கு கையெழுத்துப் போட வேண்டாம். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கால் நரம்புகளில் உபாதைகள் ஏற்படும். திருமண யோகம் கைகூடும். அலைச்சல் மிகுதியாகும். குடும்ப உறுப்பினர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். நிலம் ஒன்றை கிரயம் செய்ய முயல்வீர்கள். அதன்மூலம் குடும்ப உறுப்பினர்களிடம் பகைமை ஏற்படும். மன விரக்தி ஏற்படும். உங்களின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படக்கூடிய செயல்களில் ஈடுபட்டு கெட்ட பெயர் உருவாக வாய்ப்பு ஏற்படும். ஆகவே, பேச்சுக்களை குறைத்துக் கொள்வது அவசியம். மூத்த சகோதரர்கள், சகோதரிகள், சித்தப்பா, சித்தி, அத்தை ஆகிய உறவினர்களிடம் பகைமை ஏற்பட வாய்ப்புகள் அமையும். சேமிப்புகள் வீட்டு உபயோகப் பொருட்களாக மாறும். இல்லாவிட்டால் விரயமாகிவிடும் கவனமாக செயல்படவும்.

மாணவர்களுக்கு :

படிப்பில் கவனம் தேவை. பொறுப்புடன் செயல்படுவதால் வெற்றி பெறலாம். திரும்ப திரும்ப பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் மறதியை வெல்லலாம். ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவது அவசியம். வாகனப் பயணங்களில் எச்சரிக்கை தேவை. புதிய வாகனப் பயிற்சி மேற்கொள்பவர்கள் சாகசம் செய்ய வேண்டாம்.

விளையாட்டு துறையினருக்கு :

பயிற்சியின் போது தக்க பாதுகாப்பை மேற்கொள்ளவும். கால்களில் அடிபட வாய்ப்புகள் உள்ளது. பொறுமையுடன் செயல்படவும். முயற்சியால் வெற்றி வாகை சு+டலாம். பிரகாசமான வாய்ப்புகள் காத்திருக்கின்றது.

பெண்களுக்கு :

இடுப்பு மற்றும் அடிவயிற்றில் ஆபரேசன் செய்யும் சு+ழல் ஏற்படும். மாதவிலக்கில் ஒழுங்கற்ற தன்மைகள் உருவாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொது வாழ்வில் ஈடுபடுபவர்களுக்கு உரிய பாராட்டுகள் தாமதப்படும். சேமிப்புகள் கரையும். புதிய வேலைவாய்ப்புகள் அமையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு :

திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறுவீர்கள். வேலையில் இருந்து வந்த குறைபாடு நீங்கி பிரகாசிப்பீர்கள். வேலையில் இடமாற்றத்தை விரும்பி பெறுவீர்கள். பெருமை பெற வாய்ப்புகள் அமையும்.

வியாபாரிகளுக்கு :

அலைச்சல் உருவாகும். தொழிலில் தேக்க நிலை ஏற்படும். பேச்சில் கவனமுடன் செயல்படுவதால் தொழிலில் வளர்ச்சியைப் பெறலாம். வாகனப் பயணங்களில் பொறுமையை காக்கவும். அவசரம் காட்ட வேண்டாம்.

கலைஞர்களுக்கு :

மழை விட்டு விட்டது. தூறல் விடவில்லை என்ற நிலை உங்களுக்கு ஏற்படும். பொறுமையுடன் முயற்சி செய்வதால் வெற்றி பெறலாம். இறைவழிபாடு உங்களுக்கு ஆறுதல் தரும். மனம் தளராமல் செயல்படுங்கள் வெற்றி உறுதி.

பரிகாரம் :

தேய்பிறை அஷ்டமியில் கால பைரவருக்கு அகல் தீபம் ஏற்றி, நெய் விளக்கிட்டு செவ்வரளி மாலை சாற்றி வழிபட்டு வருவதால் காலத்தால் ஏற்படக்கூடிய கஷ்டங்களை வென்று சுகம் பெறலாம்.

தனுசு :

எதிர்ப்பை எதிர்க்கும் தனுசு ராசி அன்பர்களே! இதுவரை விரய சனியாக இருந்த சனிபகவான் இன்று முதல் ராசிக்கு வந்து ஜென்ம சனியாக வலம் வருகிறார். எடுக்கும் காரியங்களில் தடை, தாமதம் உண்டாகும். பொருளாதார முன்னேற்றம் சிறப்பாகவே இருக்கும். சிறுசேமிப்பு உங்களுக்கு மிகவும் உதவியாக அமையும். புதிய முயற்சிகளில் கவனமுடன் செயல்படவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் அதிக அக்கறை காட்டவும். திருமண யோகம் கைகூடும். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டுக்கொடுத்து செல்வதால் அனைத்தையும் சாதிக்கலாம். தாய் பற்றிய கவலைகள் மேலோங்கும். வாக்குறுதிகளை காப்பாற்ற போராடுவீர்கள். தொழிலில் தேக்கநிலை உருவாகும். புதிய தொழிலிலை தவிர்த்தல் சிறப்பை தரும். தாயின் ஆதரவு கிடைக்கும். மூத்த சகோதரர்களால் நற்பலன்கள் விளையும். வெளிவட்டாரங்களில் பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. பயணங்களில் கவனம் தேவை.

மாணவர்களுக்கு :

சிறிய முயற்சியால் பெரிய வெற்றிகளை சாதிக்கலாம். ஆகவே, முறையாக கவனமுடன் படித்தால் முதலிடம் வகிக்கலாம். தொழில் கல்வி பயில்வோருக்கு சிறப்பான காலமாகும். உடனடி வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றது.

விளையாட்டு துறையினருக்கு :

முயற்சியை கடுமையாக்குவதன் மூலம் வெற்றி வாகை சு+டலாம். ஏழரை சனி நடைபெறுவதால் தாமதமாகவே செயல்படும். பொறுமை அவசியம்.

பெண்களுக்கு :

குடும்ப மேன்மைக்கு உங்களின் ஆலோசனை மிகவும் உதவிகரமாக அமையும். வருமானம் ஈட்டும் பெண்கள் தங்களின் வருமானத்தை சிறுசேமிப்பாக மாற்றுவது நன்மை தரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு :

உங்களின் திறமையால் பாராட்டைப் பெறுவீர்கள். பதவி உயர்வு, பொருளாதார உயர்வு இருக்காது.

வியாபாரிகளுக்கு :

சற்று சோதனைக்குரிய காலம் இது. தொழிலில் தேக்கம் ஏற்படும். புதிய தொழில் துவங்குவதிலும், தொழிலை விரிவாக்கம் செய்வதிலும் சற்று பொறுமையாக யோசித்து செயல்படுவது நன்று.

கலைஞர்களுக்கு :

புதிய படைப்புக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். உற்சாகம் தரக்கூடிய பாராட்டுக்கள் அமையாது. நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. பொறுமை காக்க வேண்டியது அவசியம்.

பரிகாரம் :

ஆதரவு இல்லாதவர்களுக்கு உணவு, உடை, மருத்துவ உதவிகள் செய்வது நற்பலனை தரும். படிக்கும் குழந்தைகளுக்கு புத்தகம், நோட் வாங்கித் தருவது நன்மை தரும்.

மகரம் :

சிரமப்படாமல் சிறப்பாக இருக்கும் மகர ராசி அன்பர்களே! இன்று முதல் சனி பகவான் உங்களின் ராசிக்கு 12 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கின்றார். ஏழரை சனி துவங்குவதால், சுப விரயங்களை செய்வதன் மூலம் சிறப்பான நற்பலன்களை பெறலாம். சுப விரயங்களை செய்யாவிட்டால் வீண் செலவுகள் ஏற்படும். தர்ம காரியங்களில் பணத்தை செலவிடுவதால் புண்ணியம் கிடைக்கும். வெளியிடங்களில் வசிக்க நேரிடும். வெளியு+ர் பிரயாணங்களால் அனுகூலம் ஏற்படும். இடப்பெயர்ச்சியால் அனுகூலங்கள் பெறலாம். வாகன பயணங்களில் எச்சரிக்கை தேவை. மருத்துவ செலவுகள் ஏற்படும். தாயிற்காக மருத்துவ செலவுகள் ஏற்படும். வாகன மாற்றம் செய்வீர்கள். திருமண யோகம் கைகூடும். புதிய தொழில் முயற்சிகள் தற்போது வேண்டாம். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும்.

மாணவர்களுக்கு :

படிப்பில் கவனம் தேவை. ஞாபக மறதி ஏற்படும். உடலில் சோம்பல் தன்மை ஏற்படும். பயிற்சியை சரியாக செய்வதால் படிப்பில் சிறப்பை பெறலாம். படிப்பில் இடமாற்றம் உருவாகும்.

விளையாட்டு துறையினருக்கு :

அதிகமான, கடினமான பயிற்சியை மேற்கொள்வதால் வெற்றி கிடைக்கும். தக்க பாதுகாப்புடன் பயிற்சியை மேற்கொள்ளவும். வெற்றி வாய்ப்புகள் தாமதப்பட்டு கிடைக்கும்.

பெண்களுக்கு :

பெண்களின் உடல் நலனில் அக்கறை தேவை. பெண்களின் மூலம் சுப விரயங்கள் ஏற்படும். வீடு கட்டும் சு+ழல் அமையும்.

வியாபாரிகளுக்கு :

தொழிலில் தேக்க நிலை ஏற்படும். வருமானத்தைவிட விரயம் அதிகமாகும். சோதனைக்குரிய காலமே. பொறுமையுடன் செயல்படவும். மேலும் உங்களின் ராசிக்கு சனிபகவான் ராசி அதிபதி என்பதால் பெரிய பாதிப்பு ஏற்படாது.

உத்தியோகஸ்தர்களுக்கு :

மேல் அதிகாரிகளிடம் நற்பெயர் பெற இயலாது. வேலைப்பளு அதிகமாகும். இடப்பெயர்ச்சி ஏற்படும்.

கலைஞர்களுக்கு :

படைப்புகளில் பிரபலமாக பேசப்படும். ஆனால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படாது. பொருளாதார பற்றாக்குறையால் பிரபலம் அடைய முடியாமல் தவிப்பீர்கள். வெளிநாட்டு பயணங்களில் அனுகூலம் பெறுவீர்கள்.

பரிகாரம் :

சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசியால் அர்ச்சனை செய்து, தீபம் ஏற்றி வழிபடுவது நற்பலன்களை தரும். மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொள்வதால் செல்வ வளத்தைப் பெறலாம்.

கும்பம் :

மனதில் நிறைய ரகசியங்கள் நிறைந்த கும்ப ராசி அன்பர்களே! தொழில் வகை லாபங்கள் அதிகமாகும். புதிய தொழில் முயற்சிகளை அதிகம் செய்வீர்கள். நண்பர்களின் மூலம் நற்பலனை அடையலாம். பொருளாதார முயற்சிகள் மேன்மை தரும். திருமண யோகம் கைகூடும். புத்திர பாக்கியத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். வீடு கட்டும் யோகம் அமையும். எடுக்கும் காரியங்களில் முயற்சி வெற்றியை தரும். ராஜ யோகங்கள் ஏற்படும். பிள்ளைகளிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். பு+ர்வீக சொத்துகளில் சுமூகமான முறையில் தீர்வு காண்பது உத்தமம். எதிர்கால திட்டங்களை தீட்டுவீர்கள். வாகனப் பயணங்களில் எச்சரிக்கை தேவை.

மாணவர்களுக்கு :

படிப்பில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். உயர்கல்வி பயில்வோருக்கு படிப்பில் முதலிடம் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் சிறப்பாக அமையும்.

விளையாட்டு துறையினருக்கு :

விளையாட்டில் தனி கவனம் செலுத்துவதன் மூலம் வெற்றி வாகை சு+டலாம். வெளி இடங்களில் வெற்றி கிடைக்கும்.

பெண்களுக்கு :

சேமிப்பு அதிகரிக்கும். மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். அத்தை மற்றும் சித்தப்பாவினால் அனுகூலம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு :

வேலையில் இடப்பெயர்ச்சி உண்டாகும். அயல் நாட்டு வேலை வாய்ப்புகள் அமையும். நீர், திரவம் சார்ந்த வேலையில் உள்ளவர்களுக்கு உத்தமமான நிலை உருவாகும்.

வியாபாரிகளுக்கு :

பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக அமையும். சிறப்பான சேமிப்பு உருவாகும். சொத்துசேர்க்கை ஏற்படும்.

கலைஞர்களுக்கு :

உங்களின் படைப்புகளின் மூலம் உலகப் புகழ் பெறுவீர்கள். பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக அமையும். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்காலத்திற்கான திட்டங்கள் தீட்டி மகிழ்வீர்கள்.

பரிகாரம் :

தேனி மாவட்டத்தில் உள்ள குச்சனு}ர் சென்று சனி பகவானை வழிபடுவதன் மூலம் சந்தோஷமான சு+ழலை உருவாக்கலாம்.

மீனம் :

பொறுமையில் மற்றோருக்கு ஆசானாக விளங்கும் மீன ராசி அன்பர்களே!! இதுவரை உங்களின் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான் பெயர்ச்சியாகி பத்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். ஆகவே கமிஷன், தரகு சம்மந்தப்பட்ட புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். முன்னமே இவ்வகை தொழில் மேற்கொள்ளுபவர்களுக்கு இது ஒரு சிறப்பான காலமாகும். பழைய இரும்பு, கழிவுப்பொருட்கள் சம்மந்தப்பட்ட தொழில் செய்பவர்களும் சிறப்படைவார்கள். தொழில் ஸ்தாபனத்தில் உள்கட்டமைப்பு சார்ந்த பணிகளில் ஈடுபடுவீர்கள். இதனால் சில சுப விரயங்களை சந்திப்பீர்கள். லாபஸ்தானாதிபதி, தொழில் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் தொழில் சார்ந்த லாபங்கள் சிறப்பாக இருக்கும். தொழில் விரிவாக்கத்தின் காரணமாக கடன்கள் மற்றும் பொருளாதார தட்டுப்பாடுகள் உருவாகும். பண முடக்கம் ஏற்படும்.

மாணவர்களுக்கு :

மறதிகள் ஏற்படும். திரும்ப திரும்ப எழுதிப் பார்ப்பதன் மூலமாக படிப்பில் முன்னேற்றம் காணலாம். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சரிவிகித உணவு உடலுக்கு தேவை. சத்து பற்றாக்குறை ஏற்படும்.

விளையாட்டு துறையினருக்கு :

விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். இதன் மூலம் வேலை வாய்ப்புகள் அமையும், இடப்பெயர்ச்சியில் இன்பம் கூடும்.

பெண்களுக்கு :

பெண்களின் நீண்ட நாள் கனவுகள் நினைவாகும். குடும்பத்தில் பெண்களின் பங்களிப்பு நன்மை தரும். பெண்கள் மதிக்கப்படுவார்கள். புகழ் ஓங்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு :

பணியில் இடப்பெயர்ச்சி ஏற்படும். மேலதிகாரிகளிடம் நற்பெயர் பெற பல சோதனைகளை சந்திக்க வேண்டும். உங்களின் திறமை திரை மூடிய சீலையாக அமையும். பொறுமையால் சாதிக்கலாம்.

வியாபாரிகளுக்கு :

புதிய தொழிலால் பண முடக்கம் ஏற்படும். பொருளாதாரம் சீர்பெறும். பேச்சிற்கு மதிப்பு கூடும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கூட்டு தொழிலில் வெற்றி காண்பீர்கள். முயற்சி நற்பலனை தரும். அலைச்சல் மிகுதியாகும். தூக்கமின்மையால் ஆரோக்கிய குறைபாடு ஏற்படும்.

கலைஞர்களுக்கு :

படைப்புகளால் பாராட்டப்படுவீர்கள். பெரியோர்களின் ஆசீர்வாதத்தால் கலை துறையில் பிரகாசிப்பீர்கள். இரவு பகல் பாராது அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். வெளி பிரயாணங்களால் அனுகூலம் பெறுவீர்கள். இன்றைய அலைச்சலும், விரயங்களும் நாளைய முதலீடு என்பதை மனதில் கொண்டு செயலாற்றுங்கள் வெற்றி நிச்சயம்.

பரிகாரம் :

மகான்கள் மற்றும் சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்த ஆலயங்கள் சென்று வழிபாடு செய்வதால் வாழ்வில் நலமும், வளமும் பெறலாம். ஜீவ சமாதிகளுக்கு சென்று அவர்களை மனதில் நிறுத்தி தியானம் செய்வது மிகவும் சிறப்பு.No comments