பிரண்டை மருத்துவ குணங்கள்ள - Tamil Live

Breaking

ads

ads

Tuesday, 12 December 2017

பிரண்டை மருத்துவ குணங்கள்ள

Related image


நம் நாடு மூலிகைகள் நிறைந்த ஒரு மகத்துவம் மிக்க நாடு. காடு, மலைகள் மட்டும் இல்லாமல் சாலையோரங்களிலும், வேளிகளிலும் மூலிகைகள் நிறைந்திருக்கின்ற நாடு இது. அப்படி வேளிகளில் படர்ந்து வளரும் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ள ஒரு தாவரம் தான் பிரண்டை.
முழங்கால் வலி, உடல் சோர்வு, மன அழுத்தம் அல்லது வாயு சம்பந்தப்பட்டநோய்கள் உள்ளவர்கள் பிரண்டை துவயல் செய்து சாப்பிட்டால் நல்ல பயன் தரும். முழங்கால் வலி அதிகமாக உள்ளவர்கள் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டால் ஒரு மாதத்தில் நல்ல பயன் தரும்.

பிரண்டையில் உள்ள மிகையான சத்து சுண்ணாம்பு(கால்சியம்) சத்து தான். எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க கால்சியம் தேவை, அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என நம் சித்தர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும்.
பிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபட்டு உடல் குறைப்பு ஏற்படுகிறது. சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்.
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல் அல்லது பிரண்டை உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும். பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது அரு அறிய மருந்து.
வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் ஏழாயிரத்தில் உள்ள குறிப்பை கவனிக்கவும். உலகிலேயே கடினமான பொருள் வைரம் தான். அதில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு எனும்போது. 
இதற்கு மற்றொரு பெயர் "வஜ்ஜிரவல்லி" தேகத்தை வஜ்சிரமாக்கும் என்பதனால் தானோ என்னவோ.


No comments:

ads