புதிய பதிவுகள்

சந்தன மரம்

சந்தன மரமானது வெப்பத்தை தாங்கி வளரக்கூடிய ஒரு சிறிய மரம் ஆகும்.

• எல்லா மண் வகைகளிலும் நன்கு வளரக்கூடியது. பராமரிப்பு செலவு இல்லை.

• கன்று வைத்து 6 மாத காலம் நீர் ஊற்றினால் போதும். வறட்சியை தாங்கி நன்கு வளரக்கூடியது.

• சந்தனமரம் ஒரு மானாவரி பயிர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மழைநீரே போதுமானது.

• வேப்பம் ( #வேம்பு) மரமும், சந்தன மரமும் ஒரே குடும்ப வகையை சேர்ந்த மரங்களாகும்.அதனால் வேப்ப மரம்

எங்கெல்லாம் உள்ளதோ அங்கு சந்தன மரம் நன்கு வளரும்.

1.இந்தியாவில் #சந்தனம் எந்த மாநிலத்தில் அதிகம் காணப்படுகிறது?

சந்தன மரம் இந்தியாவில் அதிகமாக தமிழ்நாடு,கர்நாடகா,ஆந்திர பிரதேசம்,மகாராஷ்டிரா,ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் காணப்படுகிறது.

2.தமிழ்நாட்டில் எந்த மாநிலத்தில் சந்தன மரம் அதிகம் காணப்படுகிறது?

திருவண்ணாமலை,சேலம்,தர்மபுரி,நாமக்கல்,திண்டுக்கல் மற்றும் வேலூர் மாவட்டங்களில் அதிக அளவிலும் மற்ற மாவட்டங்களில் குறைந்த அளவிலும் சந்தன மரம் காணப்படுகிறது.

3.தமிழ்நாட்டில் எந்த வகையான சந்தனமரம் வளர்கிறது?

தமிழ்நாட்டில் எல்லாவகையான சந்தனமரமும் வளர்கிறது.

4.விவசாயிகள் எந்த நிலத்தில் சந்தனம் பயிரிடலாம்?

மானாவாரி நிலங்களிலும்,வடிகால் வசதியுள்ள விவசாய நிலங்களிலும் பயிரிடலாம். சந்தன மரத்தின் குடும்ப வகையை சார்ந்த வேம்பு எங்கெல்லாம் வளர்கிறதோ அங்கெல்லாம் சந்தன மரமும் வளரும்.

5.சந்தன கன்றுக்கு அரசு மானியம் வழங்குகிறதா?

மத்திய அரசு மானியம் 75% அளிக்கிறது. குழி எடுக்கும் செலவு,நடவு செலவு,உரச்செலவு, நாற்று வாங்கும் செலவு என மொத்த செலவில் 75% ஆகும்.

6.சந்தன மரம் மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதா?

சந்தன மரங்களை விற்பனை செய்யும்போது விற்பனை வரி செலுத்த வேண்டியுள்ளதால் அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் வனத்துறையினர் விவசாயிகளுக்கு ( மாதம் மாதம் நடக்கும் டெண்டர் மூலமாக) விற்பனை செய்து தருகிறார்கள். அதனால் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் விற்பனை செய்து தரப்படும்.

7.சந்தன மரத்தை மாவட்ட வனத்துறையினர் விற்பனை செய்து தருவார்களா?

சந்தன மரங்களை கட்டிங் செய்து ரகம் பிரித்து அதன் கழிவுகளை நீக்கியும், மரத்தின் உரிமையாளரின் ஒப்புதலோடு விலை நிர்ணய சம்மதத்தோடு மாவட்ட வனத்துறையின விற்று தருவார்கள்.

8.சந்தன ஆயில் எடுக்கும் தொழிற்சாலைகள் உள்ளதா? எந்த மாநிலத்தில் உள்ளது.?

ஆயில் தொழிற்சாலை உள்ளது. அது தமிழ்நாடு,கேரளா,பாண்டிசேரி,குஜராத் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் உள்ளது.

9.சந்தன் மரத்தில் என்னென்ன பொருட்கள் உருவாக்கப்படுகிறது?

சந்தன கட்டை துவர்ப்பு மருந்தாகவும், கசப்பு சுவையுடனும் குளிர்த்தன்மை கொடுக்க கூடியதாகவும், மனதிற்கு புத்துணர்ச்சி தருவதற்காகவும் பயன்படுகிறது.

சந்தன கட்டையில் சித்திர வேலைபாடுகளுக்கும், கதவுகள், பேனா தாங்கிகள்,பேப்பர் வெயிட்டுகள்,கத்திகள்,புகைப்பட பிரேம்கள் ஆகிய பொருட்கள் செய்யப்படுகின்றன. மேலும் சந்தன பவுடர்,சந்தன சோப்பு மறும் அகர்பத்தி தயாரிக்கப்படுகிறது. சந்தன மரமானது சந்தனம் தயாரிக்கவும் துணி வகைகள் மற்றும் அலமாரிகள் ஆகியவற்றிற்கு வாசனை பொருளாக பயன்படுகிறது.

10.சந்தன் ஆயில் எது எதோடு சேர்க்கப்படுகிறது?

சந்தன மரத்தூளை ஆவியாக்கி பிரித்தல மூலம் எடுக்கப்படும் ஈஸ்டு இந்தியன் சேண்டல் வுட் ஆயில் மிகவும் இனிய நறுமணம்,வாசனை,வெதுவெதுப்பான தன்மை மற்றும் அதன் தனித்துவம் ஆகியவற்றால் அதிக விலை மதிப்பை பெற்றுள்ளது.

சந்தன எண்ணெய் அதிக அளவில் மற்ற வாசனை திரவியங்கள் தயாரிப்பில் பகுதி பொருளாக பயன்படுத்தப்படுகிறது. சந்தன எண்ணெயுடன் மற்ற வாசனைப் பொருட்களை கலந்து தயாரிக்கப்படும் வாசனை திரவியங்களே அதிக தரமுள்ளதாக உள்ளது.

11. சந்தன இந்தியாவில் அழியும் தருணத்தில் உள்ளதா?

சந்தன உற்பத்தியில் இந்தியா முதலிடத்திலும் அதற்கு அடுத்தபடியாக இந்தோனேசியா உள்ளது. தற்போதைய நிலவரப்படி சந்தன மரத்தின் தேவையானது ஆண்டிற்கு 5000 முதல் 6000 மெட்ரிக் டன்கள், அதில் 2.3 பங்கு இந்திய சந்தனத்திற்கு தான்.

12. சந்தன மரத்தினை இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும் விவசாயம் செய்யலாமா?

அனைத்து மாநிலங்களிலும் சந்தன மரம் வளர்க்கலாம். விற்பனை வரி மட்டும் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.

13.சந்தன மரத்தை வளர்க்க அரசு ஆணை உள்ளதா?.

விவசாய நிலத்தில் சந்தன மரத்தினை வளர்க்க 2002 அரசு ஆணையும் 2008 அரசு ஆணையும் உள்ளது.

14.இந்தியாவில் சந்தன கட்டை ஒரு கிலோ அரசு விலை எவ்வளவு?

சந்தன மரத்தின் தரத்தின் அடிப்படையில் ஒரு கிலோ ரூ.2500 முதல் ரூ.7500 வரை விற்பனை ஆகிறது.

15.ஒரு லிட்டர் சந்தன ஆயில் என்ன விலை?

சந்தன ஆயில் தற்போது 1 லிட்டர் ரூ.70000 முதல் 190000 வரை விலை போகிறது.

16. சந்தன மரம் வளர்க்க் துணை செடி வளர்க்க வேண்டுமா?

சந்தன மரமானது 3 ஆண்டு முதல் 4 ஆண்டு வரை நைட்ரஜனை உற்பத்தி செய்து கொள்ளும் தன்மை அதற்கு இல்லை. அதனால் வேர் முடிச்சுகளில் ஹைட்ரஜனை சேகரித்து வைக்கும் தன்மை கொண்ட துணை செடியினை அருகில் வளர்த்தால் தான் சந்தன மரம் வளரும்.

17. சந்தன மரம் ஒட்டுண்ணி அல்லது சாருண்ணி வகையினை சாந்துள்ளதா?

சந்தனம் மரம் ஒட்டுண்ணியோ அல்லது சாறுண்ணி வகையையோ சார்ந்தது இல்லை.

18.சந்தன மரத்தோடு துணைமரம் வளர்ப்பது எதற்காக?

சந்தன மரம் வளர்க்க ஆரம்ப காலத்தில் நிழல் தேவைப்படுகிறது. அதனால் சந்தன மரத்திற்கு இடைவெளியில் குமிழ்மரம் அல்லது மலைவேம்பு மரம் வளர்க்கலாம். சந்தன மரத்தின் குறைந்த முதிர்வு காலம் 12/14 ஆண்டுகள் ஆகும். அதனால் இடை வருமானம் ஈட்டவும் துணைமரம் உதவியாக உள்ளது. அதாவது குமிழ் கட்டிங் 6 ½ / 7 ஆண்டுகள், மலைவேம்பு 7 / 9 ஆண்டுகள்.

19.சந்தன விதை எத்தனை நாட்களில் முளைக்கும்?

சந்தன விதை 32/45 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை முளைக்கும் தன்மை கொண்டது.

20.விவசாயிகள் எத்தனை மாதம் வளர்ந்த சந்தன் கன்றுகளை நடவு செய்யலாம்?

1 வருடம் ஆன,அதற்கு மேலும் உள்ள சந்தன கன்றுகளை மட்டுமே நடவுக்கு பயன்படுத்த வேண்டும்

21. சந்தன கன்று நடவு செய்த நிலத்தில் ஊடுபயிர் செய்யலாமா?

சந்தம மர நடவு செய்த தோட்ட்த்தில் ஒரே காலகட்டத்தில் 5 அடுக்கு வருமானம் பெறலாம்.

i) சந்தனத்துடன் குமிழ் மரத்தினையும்

ii) குமிழ் மரத்தில்

iii) மிளகு காப்பியையும்,மேலும்

iv) வாழையையும்

v) மூலிகை பயிரான எளிதில் வருமானம் தரக்கூடிய மணத்தக்காளி,முருங்கைக்கீரை,அரைக்கீரை, தண்டு கீரை, பொன்னாங்கன்னி,சிறுகீரை செடி வகையான் மருதாணி,செம்பருத்தி,கருவேப்பிலை,துளசி,வல்லாரை ஆகியவைகளை மரத்தோட்டத்தில் ஊடுபயிராக வளர்த்து பயன் பெறலாம்.

tamillive.in

No comments