தமிழ் லைவ்
தமிழ் வாழ்க!!!

இன்றைய ராசிபலன்கள் - 29.12.2017






♈ மேஷம் :

தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் வருமானம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். எண்ணிய எண்ணங்களில் சில காரிய தடங்கல்கள் உண்டாகும். உறவினர்களின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அசுவினி : ஒற்றுமை மேம்படும்.
பரணி : புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.

♉ ரிஷபம் :

செயல்பாடுகளில் இருந்த இடர்பாடுகள் குறைந்து புத்துணர்ச்சி அடைவீர்கள். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வழக்குகளில் சுமூகமான நிலை உருவாகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

கிருத்திகை : காரிய தடங்கல்கள் ஏற்படும்.
ரோகிணி : பயணங்களால் இலாபம் கிடைக்கும்.
மிருகசீரிடம் : தன்னம்பிக்கை உயரும்.

♊ மிதுனம் :

பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். வெளிநாடு சம்பந்தமான பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். உடன் பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் பொருட்சேர்க்கை உண்டாகும். கண்களில் ஏற்பட்ட உபாதைகளின் வீரியம் குறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மிருகசீரிடம் : ஆசிர்வாதம் கிடைக்கும்.
திருவாதிரை : அனுகூலமான நாள்.
புனர்பூசம் : பொருளாதார மேன்மை உண்டாகும்.

♋ கடகம் :

சேமிப்பு அதிகரிக்கும். மூத்த சகோதர, சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் மூலம் சுப செய்திகள் வீடு தேடி வரும். தேகத்தின் உருவ அமைப்பிற்காக பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : சேமிப்பு அதிகரிக்கும்.
பூசம் : சுப செய்திகள் வீடு தேடி வரும்.
ஆயில்யம் : முன்னேற்றமான நாள்.

♌ சிம்மம் :

தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். பணிகளில் பொறுப்புகள் மற்றும் அதிகாரம் அதிகரிக்கும். கால்நடைகளால் எண்ணிய இலாபம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் சில விரயச் செலவுகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மகம் : செயல்களில் வெற்றி கிடைக்கும்.
பூரம் : இலாபகரமான நாள்.
உத்திரம் : விரயங்கள் உண்டாகும்.

♍ கன்னி :

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும். தானியங்களால் இலாபம் உண்டாகும். குடும்பத்தில் புதிய உறுப்பினர்களின் வருகை ஏற்படும். சமூகசேவை புரிபவர்களுக்கு சாதகமற்ற சூழல் உண்டாகும். வேலை செய்யும் இடங்களில் கவனமுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

உத்திரம் : குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உண்டாகும்.
அஸ்தம் : எச்சரிக்கை தேவை.
சித்திரை : பணியில் நிதானம் தேவை.

♍ துலாம் :

மனச்சோர்வுகளால் பணிபுரியும் இடத்தில் கெட்ட பெயர் ஏற்பட வாய்ப்புண்டு. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய தொழிலைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றும். தம்பதிகளுக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சொந்த பந்தங்களின் வருகையால் இன்பம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : பணியில் கவனம் தேவை.
சுவாதி : எண்ணங்கள் மேம்படும்.
விசாகம் : சுபமான நாள்.

♍ விருச்சகம் :

இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். உயர் அதிகாரிகளிடம் மதிப்பு மற்றும் சிநேகிதம் உண்டாகும். வேலை செய்யும் இடங்களில் சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். பணிகளில் விவேகத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மிதமான கருப்பு

விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
அனுஷம் : புதிய சிநேகிதம் உண்டாகும்.
கேட்டை : விவேகத்துடன் செயல்படவும்.

♍ தனுசு :

இணையதளம் சம்பந்தப்பட்ட பணிகளில் உள்ளோருக்கு கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். பங்காளிகளிடம் வாக்குவாதத்தை தவிர்த்து அமைதியுடன் நடந்து கொள்ளவும். உயர்கல்வி பயில்வோரின் திறமைகளுக்கான அங்கீகாரம் மற்றும் கீர்த்திகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூராடம் : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
உத்திராடம் : திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

♍ மகரம் :

தொழிலில் மேன்மையான நிலை உண்டாகும். குடும்பத்தில் புதிய உறுப்பினர்களின் வருகை ஏற்படும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

உத்திராடம் : மேன்மை உண்டாகும்.
திருவோணம் : சாதகமான நாள்.
அவிட்டம் : முன்னேற்றம் உண்டாகும்.

♍ கும்பம் :

ஆன்மிகம் சம்பந்தமான பணிகளை மேற்கொள்வதால் மகிழ்ச்சி மற்றும் புகழ் உண்டாகும். புதுவிதமான தொழில் நுட்ப வித்தைகளை பயில முயல்வீர்கள். விலையுயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனத்துடன் கையாள வேண்டும். காதில் ஏற்பட்ட வலிகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

அவிட்டம் : ஆன்மிக பணிகளை மேற்கொள்வீர்கள்.
சதயம் : புதிய கலைகளை கற்று கொள்வீர்கள்.
பூரட்டாதி : ஆரோக்கியம் மேம்படும்.

♍ மீனம் :

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். புதிய ஆபரணங்கள் வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். பட்டயக் கல்வி பயிலும் மாணவர்களின் கலை சார்ந்த அறிவுகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

பூரட்டாதி : நிதானத்துடன் செயல்படவும்.
உத்திரட்டாதி : ஆபரண சேர்க்கை உண்டாகும்.
ரேவதி : ஞானம் மேம்படும்.





No comments