தமிழ் லைவ்
தமிழ் வாழ்க!!!

இன்றைய ராசிபலன்கள் - 28.12.2017






♈ மேஷம் :

உறவினர்களினால் நன்மைகள் உண்டாகும். தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. மனைகள் மூலம் இலாபம் உண்டாகும். விவாதங்களில் சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அசுவினி : சிந்தனைகள் மேலோங்கும்.
பரணி : உபதேசம் கிடைக்கும்.
கிருத்திகை : உறவுகள் மேம்படும்.

♉ ரிஷபம் :

உத்தியோகஸ்தர்களுக்கு பணிகளில் மேன்மை கிடைக்கும். உங்களின் மதிப்பு கூடும். கௌரவ பதவிகள் வந்தடையும். பொதுநலத் தொண்டுகளில் ஈடுபடுவீர்கள். தந்தை வழி சொத்துகளில் இருந்த சிக்கல்கள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : அனுகூலமான நாள்.
ரோகிணி : பொதுநலத் தொண்டுகளில் ஈடுபடுவீர்கள்.
மிருகசீரிடம் : மதிப்பு கூடும்.

♊ மிதுனம் :

உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். நண்பர்களின் மூலம் வருமானம் அதிகரிக்கும். புதிய நபர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். வாகன பயணங்களில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மிருகசீரிடம் : அமைதி காக்கவும்.
திருவாதிரை : இலாபகரமான நாள்.
புனர்பூசம் : பயணங்களில் கவனம் தேவை.

♋ கடகம் :

கணவன், மனைவிக்கிடையே உள்ள வாக்குவாதம் குறைந்து அன்பு அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான இடப்பெயர்ச்சி உண்டாகும். பொருளாதார மேன்மைக்கான செயல்பாடுகள் எண்ணிய பலன்களை தரும். மனக்கவலைகள் குறைந்து புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

புனர்பூசம் : இடப்பெயர்ச்சி உண்டாகும்.
பூசம் : அன்பு அதிகரிக்கும்.
ஆயில்யம் : பொருளாதாரம் சிறப்படையும்.

♌ சிம்மம் :

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணியில் உள்ளவர்களுக்கு வீண் கவலைகள் தோன்றும். செயல்பாடுகளில் சிறிது கவனம் தேவை. பங்காளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். அலைச்சல்களால் இலாபம் உண்டாகும். பிறருக்கு நன்கொடைகள் கொடுத்து மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

மகம் : கவனம் தேவை.
பூரம் : அலைச்சல்களால் இலாபம் உண்டாகும்.
உத்திரம் : சாதகமான சூழல் அமையும்.

♍ கன்னி :

பிள்ளைகளின் மூலம் சுப விரயம் உண்டாகும். வெளிநாட்டு வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். பூர்வீக சொத்துகளால் நன்மை உண்டாகும். உயர்கல்விக்கான முயற்சிகள் நல்ல பலன்களை தரும். தொழிலில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திரம் : சுப விரயம் உண்டாகும்.
அஸ்தம் : நன்மைகள் உண்டாகும்.
சித்திரை : ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும்.

♍ துலாம் :

தாயின் ஆதரவினால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். தலைமைப் பொறுப்பிற்கான முயற்சிகள் ஈடேறும். கடல் வழி பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

சித்திரை : புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.
சுவாதி : இலாபம் கிடைக்கும்.
விசாகம் : சுப முயற்சிகள் கைகூடும்.

♍ விருச்சகம் :

அரசாங்கத்திடமிருந்து அனுகூலமான செய்திகள் வரும். நிறுவனங்களில் சவாலான பணிகளில் ஈடுபட்டு அனைவராலும் புகழப்படுவீர்கள். ஆபரணச் சேர்க்கைக்கான செயல் திட்டத்தை தீட்டுவீர்கள். கடிதத்தின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

விசாகம் : சாதகமான சூழல் உண்டாகும்.
அனுஷம் : உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
கேட்டை : குறுகிய தூர பயணங்களால் இலாபம் கிடைக்கும்.

♍ தனுசு :

குடும்ப உறுப்பினர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். வாக்கு வன்மையால் பெருமைகள் உண்டாகும். நிர்வாகத்தில் சாதகமற்ற சூழல் ஏற்படும். புண்ணிய யாத்திரை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மிதமான கருப்பு

மூலம் : வாக்கு வன்மையால் இலாபம் உண்டாகும்.
பூராடம் : திறமைகள் வெளிப்படும்.
உத்திராடம் : ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

♍ மகரம் :

கூட்டாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்களுடன் கூடி பேசி மகிழ்வீர்கள். சுப செய்திகள் வந்தடையும். சிந்தனையில் மாற்றம் உண்டாகும். இழந்த பொருட்களை மீட்பதற்கு மனைவியின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.
திருவோணம் : சுபமான நிகழ்வுகள் நடைபெறும்.
அவிட்டம் : சிந்தனையில் மாற்றம் உண்டாகும்.

♍ கும்பம் :

தொழில் அபிவிருத்திக்கான கடனுதவிகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களினால் சுப விரயம் உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு பரிசுகளை பெறுவீர்கள். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். அரசு அதிகாரிகளின் மூலம் சுமூகமற்ற நிலை ஏற்படும். கால்நடைகளின் பராமரிப்பில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : சாதகமான சூழல் ஏற்படும்.
சதயம் : ஆதரவு கிடைக்கும்.
பூரட்டாதி : நிதானத்துடன் செயல்படவும்.

♍ மீனம் :

உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும். மூத்த சகோதரர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்க்கவும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சபைகளில் ஆதரவுகள் அதிகரிக்கும். வேளாண்மை தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : உடல்நலம் மேம்படும்.
ரேவதி : பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.






No comments