புதிய பதிவுகள்

இன்றைய இராசிபலன்கள் - 27.12.2017♈ மேஷம் :

புதிய வேலைக்கான முயற்சிகள் எதிர்பார்த்த பலனை தரும். திடீர் யோகத்தால் எதிர்பாராத வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். தாய்மாமன் உறவுகள் மேம்படும். கால்நடைகள் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அசுவினி : உதவிகள் கிடைக்கும்.
பரணி : உறவுகள் மேம்படும்.
கிருத்திகை : புகழ் உண்டாகும்.

♉ ரிஷபம் :

நண்பர்களின் உதவியால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புத்திரர்கள் வழியில் சுப செய்திகள் வரும். மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். வாதத் திறமையால் இலாபம் உண்டாகும். அந்நியர்களால் தன விருத்தி உண்டாகும். புதிய முயற்சிகளில் எண்ணிய பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
ரோகிணி : உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும்.
மிருகசீரிடம் : முயற்சிகள் நன்மை தரும்.

♊ மிதுனம் :

தொழில் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். வாகனங்களால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நீர்வழி தொழிலில் இலாபம் கிடைக்கும். தாயின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். விவாதங்களில் எண்ணிய முடிவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மிருகசீரிடம் : இலாபகரமான நாள்.
திருவாதிரை : சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
புனர்பூசம் : விவாதங்களில் வெற்றி கிடைக்கும்.

♋ கடகம் :

தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. ஆன்மிக பணிகளை மேற்கொள்வதால் புகழ் உண்டாகும். இளைய சகோதரர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். புதியவற்றை கண்டறிவதற்கான உங்கள் முயற்சிகள் அனுகூலமான பலனைத் தரும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : புகழ் உண்டாகும்.
பூசம் : பொறுமையுடன் செயல்படவும்.
ஆயில்யம் : காரிய சித்தி உண்டாகும்.

♌ சிம்மம் :

வெளியூர் பயணங்களால் மேன்மையான சூழல் உண்டாகும். கால்நடைகளிடம் எச்சரிக்கையுடன் இருக்கவும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களுடன் தேவையற்ற வாக்கு வாதத்தை தவிர்த்து பொறுமையுடன் நடந்து கொள்ளவும். வாக்குறுதிகளை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : பயணங்களால் நன்மை உண்டாகும்.
பூரம் : எச்சரிக்கை தேவை.
உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.

♍ கன்னி :

இசைக் கலைஞர்கள் தங்கள் திறமைகளால் இலாபம் அடைவார்கள். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கூட்டாளிகளின் உதவியுடன் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். மனதில் உள்ள கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : முயற்சிகளால் இலாபம் உண்டாகும்.
அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.
சித்திரை : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

♍ துலாம் :

பிறரிடம் எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். புதிய வேலைக்கான உங்களின் முயற்சிகள் சாதகமான முடிவைத் தரும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணிகளில் கூடுதல் பொறுப்புகளால் பணிச்சுமை அதிகரிக்கும். கண்ணில் சில உபாதைகள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
சுவாதி : பொறுப்பு அதிகரிக்கும்.
விசாகம் : உபாதைகள் குறையும்.

♍ விருச்சகம் :

புதிய வாகனங்களை வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். தந்தையிடம் அனுசரித்து செல்வது நல்லது. உயர்கல்வி பயிலும் மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். பூர்வீகச் சொத்துகளில் சில சாதகமற்ற சூழல்கள் அமையும். பயணங்களில் எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

விசாகம் : வாகன விருத்தி உண்டாகும்.
அனுஷம் : அறிவு மேம்படும்.
கேட்டை : விவேகத்துடன் செயல்படவும்.

♍ தனுசு :

கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட உபாதைகளின் வீரியம் குறையும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். செய்யும் பணிகளில் கவனம் தேவை. தந்தை பற்றிய கவலைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

மூலம் : உறவுகள் மேம்படும்.
பூராடம் : பணிகளில் இலாபம் கிடைக்கும்.
உத்திராடம் : ஆரோக்கியம் மேம்படும்.

♍ மகரம் :

இளைய உடன்பிறப்புகளால் சுப விரயம் உண்டாகும். உங்களின் புதிய முயற்சிக்காக பாராட்டு கிடைக்கும். எதிர்பாலின மக்களினால் சாதகமற்ற சூழல் அமையும். ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு காரிய தடங்களால் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்க காலதாமதமாகும். ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திராடம் : சுபநிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி ஏற்படும்.
திருவோணம் : புகழ் உண்டாகும்.
அவிட்டம் : எண்ணங்கள் மேலோங்கும்.

♍ கும்பம் :

தூர தேச பயணங்களால் சாதகமான சூழல் அமையும். மனதில் தேவையற்ற சஞ்சல எண்ணங்கள் தோன்றும். பொதுக்கூட்ட பேச்சுகளில் ஈடுபடுபவர்கள் கவனத்துடன் பேசவும். அந்நியர்களால் ஏற்படும் பிரச்சனைகளை பொறுமையுடன் எதிர்கொள்ளவும். தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

அவிட்டம் : சாதகமான நாள்.
சதயம் : பேச்சில் கவனம் தேவை.
பூரட்டாதி : அமைதியை கடைபிடிக்கவும்.

♍ மீனம் :

பெரியவர்களின் ஆசிகள் மற்றும் ஆலோசனைகள் கிடைக்கும். அரசு உயர் அதிகாரிகளை சந்திப்பதற்கான சூழல் உண்டாகும். மனதில் காதல் சம்பந்தப்பட்ட எண்ணங்கள் தோன்றும். விவாதங்களில் சாதகமான சூழல் உண்டாகும். புதிய மனை வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மிதமான நீலம்

பூரட்டாதி : ஆலோசனைகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : சுபமான நாள்.
ரேவதி : பூமி விருத்தி உண்டாகும்.

No comments