அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

புதிய பதிவுகள்

புத்தாண்டு ராசிபலன் 2018: சிம்மராசிக்காரர்களுக்கு வெற்றிகரமான ஆண்டு

எதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் வெற்றிகரமான ஆண்டாக அமையும்.

கடந்த ஆண்டு 4 ஆம் இடத்தில் இருந்து சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5ஆம் வீட்டில் அமர்ந்துள்ளார்.

ராகு 12ஆம் வீட்டிலும் கேது பகவான் 6ஆம் வீட்டில் சஞ்சரிக்கின்றனர். குரு பகவான் 3ஆம் வீட்டிலும் வரும் 11.10.2018 முதல் 4ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க இருப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது.

கவனம் தேவை

புத்தாண்டு பிறக்கும் போது உங்கள் ராசி நாதன் சூரியன் தனுசு ராசியில் சனியோடு கூடவே சுக்கிரனோடும் சேர்ந்திருக்கிறார். இது சாதகமற்ற அம்சம்தான். அரசு வேலைக்கான தேர்வுகள் எழுதுபவர்கள் அவசரப் படவேண்டாம். திருமணத்திற்காக முயற்சிகளை மேற்கொண்டால் தடைகளுக்குப் பின்பே வெற்றி கிடைக்கும். சூரியன் சனி சேர்க்கையினால் செலவுகள் 

பேச்சு சாமர்த்தியம்


சுக்கிரன், புதன் சாதகமாக இருப்பதால் பேச்சு சாமர்த்தியத்தினால் வருமானம் அதிகரிக்கும்.
மார்ச் மாதத்தில் செவ்வாய் இடப்பெயர்ச்சியடைந்து சனியோடு இணைகிறார். இதனால் உங்களுக்கு சின்னச் சின்ன செலவுகள் வந்து கொண்டே இருக்கும் தயாரின் உடல் நலனின் கவனம் தேவை.


இடமாற்றம் ஏற்படும்

12ஆம் வீட்டில் உள்ள ராகுவினால் வண்டி வாகனங்கள் மற்றும் வீடு, மனையை புதுப்பிப்பதற்காக செலவுகளைச் செய்ய நேரிடும். உத்தியோகஸ்தர்களுக்கு சிறுசிறு பிரச்சினைகளும் சங்கடங்களும் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். பணவரவுகள் ஏற்ற இருக்கமாக இருப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களால் சில ஆதாயங்களைப் பெற முடியும்.


கொடுக்கல் வாங்கல் கவனம்


குரு சாதகமற்று சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட வேண்டும். 6ஆமிட கேதுவின் புண்ணியத்தால் அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்.
எந்த வித போட்டிகளையும் சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டில் உள்ள நண்பர்களினால் நல்லதே நடக்கும். பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் வம்புகளில் இருந்து தப்பிக்கலாம்.

படிப்பில் கவனம் தேவை

மாணவர்களுக்கு கல்வியில் மந்தமான நிலை இருக்கும் காரணம் சனிபகவானின் சஞ்சாரம், பார்வைதான். இதேபோல குருவும் சாதகமற்று இருக்கிறார். விடாமுயற்சியுடன் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தினால் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். மொத்தத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு இது முயற்சிகளினால் வெற்றி கிடைக்கும் ஆண்டாக அமையும்.


No comments