இன்றைய இராசிபலன்கள் - 17.12.2017 - Tamil Live

Breaking

ads

ads

Sunday, 17 December 2017

இன்றைய இராசிபலன்கள் - 17.12.2017

மேஷம் : 

இளைய சகோதரர்களினால் சுப விரயம் உண்டாகும். தாய் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்காது. பணிச்சுமை அதிகரிக்கும். உடல்நலனில் கவனம் தேவை. கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அசுவினி : அமைதியுடன் இருக்கவும்.
பரணி : தாய் பற்றிய கவலைகள் அதிகரிக்கும்.
கிருத்திகை : உடல் நலனில் கவனம் தேவை.

ரிஷபம் :

எண்ணங்கள் நிறைவேறும். புதியவர்களின் நட்புகள் கிடைக்கும். புத்திரர்களால் பெருமை அடைவீர்கள். திருமண முயற்சிகள் கைகூடும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.
ரோகிணி : புதிய நட்புகள் உண்டாகும்.
மிருகசீரிடம் : காரிய சித்தி ஏற்படும்.

மிதுனம் :

தாயின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும். சிந்தனையில் மாற்றம் உண்டாகும். வாகனங்களால் விரயம் ஏற்படும். பொருட்களை கையாளுவதில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் சக பணியாட்களை அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

மிருகசீரிடம் : சிந்தனையில் மாற்றம் உண்டாகும்.
திருவாதிரை : பயணங்களில் கவனம் தேவை.
புனர்பு சம் : மகிழ்ச்சியான நாள்.

கடகம் :

வாரிசுகளால் சுப விரயம் உண்டாகும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி அடைவீர்கள். இளைய சகோதரர்களிடம் கனிவாக நடந்து கொள்ளவும். கலை சார்ந்த அறிவுகளால் பாராட்டப்படுவீர்கள். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பு சம் : திடீர் இலாபம் உண்டாகும்.
பு சம் : அமைதியை கடைபிடிக்கவும்.
ஆயில்யம் : பாராட்டப்படுவீர்கள்.

சிம்மம் :

மனைகளால் இலாபம் அதிகரிக்கும். புதிய நபர்களால் அனுகூலமான செயல்கள் நடைபெறும். வாக்கு வன்மையால் வருமானம் உண்டாகும். சுய தொழிலில் சாதகமான சு ழல் அமையும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மகம் : வாக்கு வன்மையால் வருமானம் உண்டாகும்.
பு ரம் : அனுகூலமான நாள்.
உத்திரம் : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

கன்னி :

நீண்ட நாள் கனவுகளை தைரியத்துடன் நடைமுறைப்படுத்துவீர்கள். காது சம்பந்தப்பட்ட உபாதைகள் நீங்கும். தொழிலில் முன்னேற்றம் அடைவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த உதவிகளால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறம்

உத்திரம் : கனவுகளை தைரியத்துடன் நடைமுறைப்படுத்துவீர்கள்.
அஸ்தம் : ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
சித்திரை : எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

துலாம் :

வெளியு ர் பயணங்களால் தனலாபம் அடைவீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு உயரும். கௌரவ பதவிகள் மகிழ்ச்சியை உண்டாக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும். பேச்சில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

சித்திரை : பயணங்களால் இலாபம் அடைவீர்கள்.
சுவாதி : புதிய இடங்களுக்கு செல்வீர்கள்.
விசாகம் : வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு உயரும்.

விருச்சகம் :

பொதுக்கூட்ட பேச்சுகளில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காது. மூத்த சகோதரர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும். வாகன பயணங்களில் கவனம் தேவை. வீண் பேச்சுகளை குறைப்பது நன்மையை தரும். செய்யும் வேலைகளில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : பேச்சில் கவனம் தேவை.
அனுஷம் : பயணங்களில் எச்சரிக்கை தேவை.
கேட்டை : பணியில் கவனத்துடன் செயல்படவும்.

தனுசு :

மனைவியால் சுப விரயம் உண்டாகும். நண்பர்களுடன் இணைந்து கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் பொறுமையை கடைபிடிக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

மூலம் : மனமகிழ்ச்சி உண்டாகும்.
பு ராடம் : சுப விரயம் உண்டாகும்.
உத்திராடம் : நிதானத்தை கடைபிடிக்கவும்.

மகரம் :

புத்திரர்களின் உதவியால் தொழில் விருத்தி உண்டாகும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். அரசு அதிகாரிகளினால் சாதகமான சு ழல் அமையும். பதவி மேன்மைக்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்கால சிந்தனைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

உத்திராடம் : புத்திரர்களின் ஆதரவு கிடைக்கும்.
திருவோணம் : மகான்களின் தரிசனம் கிடைக்கும்.
அவிட்டம் : வாய்ப்புகள் உருவாகும்.

கும்பம் :

மாணவர்கள் பயிலும் விதத்தில் மாற்றம் உண்டாகும். நுட்பங்களை கற்பதில் ஆர்வம் உண்டாகும். நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். தொழில் சார்ந்த அலைச்சல்களால் மனச்சோர்வு உண்டாகும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6 
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : மாணவர்கள் பயிலும் விதத்தில் மாற்றம் உண்டாகும்.
சதயம் : கவனம் தேவை.
பு ரட்டாதி : ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும்.

மீனம் :

கால்நடைகளால் இலாபம் உண்டாகும். விவாதங்களினால் புகழ் அடைவீர்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இழந்த பொருட்களை மீட்பதற்கு தாய் வழி ஆதரவு கிடைக்கும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

பு ரட்டாதி : இலாபகரமான நாள்.
உத்திரட்டாதி : பாராட்டப்படுவீர்கள்.
ரேவதி : உதவிகள் கிடைக்கும்.

No comments:

ads