இன்றைய இராசிபலன்கள் - 14.12.2017 - Tamil Live

Breaking

ads

ads

Thursday, 14 December 2017

இன்றைய இராசிபலன்கள் - 14.12.2017


 மேஷம் : 

குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். மனைவி மீதான அன்பு அதிகரிக்கும். போக்குவரத்தால் சுபம் உண்டாகும். நண்பர்களுடனான நட்பு நிலை மேலோங்கும். ஜவுளி துறையில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத தன வரவுகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : காரிய சித்தி உண்டாகும்.
கிருத்திகை : பயணங்களால் அனுகூலம் ஏற்படும். 

ரிஷபம் :

இளைய சகோதரர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். பொறுமையுடன் செயல்பட்டு எண்ணிய எண்ணத்தை செயல்படுத்தவும். தொழிலில் வேலையாட்களால் மனக்கவலை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.
ரோகிணி : பணியில் கவனம் தேவை.
மிருகசீரிடம் : காலதாமதம் ஏற்படும்.

 மிதுனம் :

வாரிசுகளால் சுப விரயம் உண்டாகும். அரசு அதிகாரிகளுக்கு இடையேயான நட்பில் பரஸ்பரம் உண்டாகும். பிறரிடம் தம் கருத்தை எடுத்துரைக்கும்போது கவனத்துடன் செயல்படவும். வெளியூர் வேலை வாய்ப்புகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

மிருகசீரிடம் : சுப விரயம் உண்டாகும்.
திருவாதிரை : பரஸ்பரம் ஏற்படும்.
புனர்பூசம் : பொறுமையுடன் செயல்படவும்.

கடகம் :

கால்நடை வியாபாரிகளுக்கு தொழிலில் எண்ணிய இலாபம் கிடைக்கும். சிறு தூர தொழில் பயணங்களால் மேன்மையான நிலை ஏற்படும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு திறமைக்கேற்ற புகழ் உண்டாகும். பு மிவிருத்திக்கான செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : இலாபம் உண்டாகும்.
பூ சம் : திறமைகள் வெளிப்படும்.
ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.

சிம்மம் :

தொழில் சார்ந்த முயற்சிகளால் சுப விரயம் உண்டாகும். வாக்கு வன்மையால் இலாபம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பார்த்த உதவிகளில் காலதாமதம் உண்டாகும். பணப்புழக்கத்தில் கவனத்துடன் இருக்கவும். உயர் பதவியில் இருப்பவர்கள் நிதானத்தை கடைபிடிக்கவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மகம் : முயற்சிகள் கைகூடும்.
பூ ரம் : கவனம் தேவை.
உத்திரம் : சுப விரயம் உண்டாகும்.

கன்னி :

தானிய விளைச்சல்கள் எதிர்பார்த்த வியாபாரத்தை அளிக்கும். வாக்குறுதிகளால் புகழ் உண்டாகும். தந்தையின் சொத்துகளால் இலாபம் அதிகரிக்கும். பொதுநலத் தொண்டுகளில் ஈடுபடுவீர்கள். மூத்த சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திரம் : அனுகூலமான நாள்.
அஸ்தம் : புகழ் உண்டாகும்.
சித்திரை : பொதுநலத் தொண்டுகளில் ஈடுபடுவீர்கள்.

துலாம் :

பொருள்களை கையாளுவதில் கவனம் தேவை. உயர் அதிகாரிகளிடம் பகை உண்டாகும். வாகன பயணங்களில் எச்சரிக்கை தேவை. ஞான சிந்தனைகள் மேலோங்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மெஜண்டா நிறம்

சித்திரை : அனுசரித்து செல்லவும்.
சுவாதி : ஞான சிந்தனைகள் மேலோங்கும்.
விசாகம் : தியானம் மேற்கொள்வீர்கள்.

விருச்சகம் :

கூட்டாளிகளால் சுப விரயம் ஏற்பட்டு தொழில் விருத்தி செய்வீர்கள். நிர்வாகம் சம்பந்தமான செயல்பாடுகளில் உங்களின் தனித்திறமைகள் வெளிப்படும். கடல் மார்க்க செய்திகளால் தன விரயம் உண்டாகும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : ஞான போதனை ஏற்படும்.
அனுஷம் : தனித்திறமைகள் வெளிப்படும். 
கேட்டை : ஒத்துழைப்பு கிடைக்கும்.

தனுசு :

தாய்மாமன் உறவு நிலையில் அமைதி காக்கவும். விலையுயர்ந்த பொருட்களை கையாளுவதில் எச்சரிக்கை தேவை. உத்தியோகஸ்தர்கள் தங்களது பணிகளை தாமே முடிப்பது நல்லது. பந்தயங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்காது.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மூலம் : பொறுமை தேவை.
பூ ராடம் : எச்சரிக்கையுடன் செயல்படவும்.
உத்திராடம் : பொருள் சேர்க்கை உண்டாகும்.

 மகரம் :

மனதில் புதுவித எண்ணங்கள் தோன்றும். பிள்ளைகள் வழியில் அனுகூலமான செய்திகள் வரும். சர்வதேச வணிகத்தில் இலாபம் உயரும். சாமர்த்தியமான பேச்சுகளால் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வரன் தேடுபவர்களுக்கு சுப செய்திகள் வந்து சேரும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மிதமான நீல நிறம் 

உத்திராடம் : புதுவித எண்ணங்கள் தோன்றும்.
திருவோணம் : மகிழ்ச்சியான நாள்.
அவிட்டம் : புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

கும்பம் :

பணியில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். இறைவழிபாட்டில் மனம் மகிழ்ச்சி அடையும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். உயர்கல்வி பயிலுபவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூ ழல் ஏற்படும். புண்ணிய காரியங்களுக்கு உதவுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

அவிட்டம் : சாதகமான சூழல் ஏற்படும்.
சதயம் : சோர்வு நீங்கும்.
பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.

மீனம் :

புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மன தைரியத்துடன் செயல்பட்டு தொழிலில் ஏற்பட்ட பிரச்சனைகளை சரிசெய்வீர்கள். மகான்களின் தரிசனம் கிடைக்கும். மனக்குழப்பம் உண்டாகும். கால்நடைகளிடம் கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

பூரட்டாதி : எண்ணம் உயிர் பெறும்.
உத்திரட்டாதி : எதிர்கால சிந்தனைகள் மேலோங்கும்.
ரேவதி : உடல்நலம் மேம்படும்.

No comments:

ads