புதிய பதிவுகள்

இன்றைய இராசிபலன்கள் - 11.12.2017



மேஷம் : 

உயர் அதிகாரிகளிடம் பொறுமையை கடைபிடிக்கவும். பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணிகளில் கவனமாக செயல்படவும். வாகன பயணங்களில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அசுவினி : பொறுமையை கடைபிடிக்கவும்.
பரணி : அலைச்சல்கள் உண்டாகும்.
கிருத்திகை : கோபத்தை தவிர்ப்பது நல்லது.

ரிஷபம் :

திருமண முயற்சிகள் கைகூடும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். நீர் சம்பந்தப்பட்ட தொழில் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். இசைக்கலைஞர்களுக்கு சாதகமான சூ ழல் உருவாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

கிருத்திகை : நிதானத்துடன் செயல்படவும்.
ரோகிணி : இலாபம் உண்டாகும்.
மிருகசீரிடம் : சாதகமான சூழல் உண்டாகும்.

மிதுனம் :

திடீர் யோகத்தால் எதிர்பாராத பலன் கிடைக்கும். இளைய சகோதரர்களிடம் பொறுமையாக நடந்து கொள்ளவும். வாகன பயணங்களில் கவனம் தேவை. புதிய முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும். போட்டிகளில் இலாபம் அடைவீர்கள். பங்காளிகளுக்கு இடையேயான உறவு நிலை மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மிருகசீரிடம் : திடீர் யோகம் கிடைக்கும்.
திருவாதிரை : பெரியோர்களின் ஆலோசனைகள் நல்ல பலன்களை தரும்.
புனரபூசம் : உறவு நிலை மேம்படும்.

கடகம் :

நினைவாற்றல் அதிகரிக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு, பயிலும் விதங்களில் மாற்றங்கள் ஏற்படும். வாக்கு வன்மையால் இலாபம் உண்டாகும். புதிய எண்ணங்களாலும், சாதகமான முயற்சியாலும் பொருள் சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

புனர்பூசம் : மனமகிழ்ச்சி ஏற்படும்.
பூசம் : புதுமாற்றம் உண்டாகும்.
ஆயில்யம் : இடம் பெயர்தல் ஏற்படும்.

சிம்மம் :

தாயின் ஆதரவினால் நன்மைகள் உண்டாகும். புதிய நபர்களின் நட்புகளால் தனலாபம் ஏற்படும். வாதத்திறமையால் புகழ் உண்டாகும். மனைகளில் வீடு கட்டும் பணிகளை தொடங்குவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கி, அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : சாதகமான சூ ழல் ஏற்படும்.பூரம் : புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
உத்திரம் : குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்.

கன்னி :

இளைய சகோதரர்களால் சுப விரயங்கள் உண்டாகும். வெளிநாட்டு முயற்சிகளில் எண்ணிய பலன் கிடைக்கும். ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும்.
அஸ்தம் : ஆன்மிக வழிபாடு மேற்கொள்வீர்கள்.
சித்திரை : முயற்சிகள் கைகூடும்.

துலாம் :

மூத்த சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். கலைஞர்களுக்கு சாதகமான சு ழல் ஏற்படும். பொதுத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு புகழ் உண்டாகும். மறுமணத்திற்கு வரன் தேடுபவர்களுக்கு சுப செய்திகள் வந்தடையும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சாதகமான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : வேள்வியில் பங்கேற்பீர்கள்.
சுவாதி : கீர்த்தி உண்டாகும்.
விசாகம் : ஒற்றுமை உண்டாகும்.

விருச்சகம் :

அயல்நாட்டு தொழில் வாய்ப்புகளால் சேமிப்பு உயரும். மனக்கவலைகள் தீர்ந்து மகிழ்ச்சி அடைவீர்கள். இணையதள வேலை வாய்ப்புகளினால் மேன்மை உண்டாகும். எதிர்பாராத உதவிகளால் இலாபம் உண்டாகும். புனித யாத்திரை செல்வதற்கான  சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென் வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

விசாகம் : புதிய வாய்ப்புகள் உண்டாகும்.
அனுஷம் : மகிழ்ச்சி அடைவீர்கள்.
கேட்டை : பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.

தனுசு :

புதிய நபர்களின் நட்பால் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. புதியவற்றை கண்டறிந்து புகழ் அடைவீர்கள். வாக்கு வன்மையால் எதிர்பார்த்த பலனை அடைவீர்கள். ஆகாய மார்க்க பயணங்களால் அனுகூலமான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : அபிவிருத்தி உண்டாகும்.
பூராடம் : எண்ணம் ஈடேறும்.
உத்திராடம் : அனுகூலமான செய்திகள் கிடைக்கும்.

மகரம் :

ஞானத்தேடல் உண்டாகும். உயரமான இடங்களில் கவனத்துடன் பணியை மேற்கொள்ளவும். பொது நலத்திற்கான நன்கொடைகளை அளிப்பீர்கள். தர்ம ஸ்தாபனங்களின் உதவிகளால் நிர்வாகிகளுக்கு பெருமை கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறம்

உத்திராடம் : ஞானத்தேடல் உண்டாகும்.
திருவோணம் : நிதானத்துடன் செயல்படவும்.
அவிட்டம் : தீட்சை கிடைக்கும்.

கும்பம் :

எதிலும் நிதானத்துடன் செயல்படவும். நண்பர்களிடம் உரையாடும்போது பேச்சுகளில் கவனம் வேண்டும். பூஜை, புனஸ்காரங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் ஏற்படும். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களால் விரயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

அவிட்டம் : அமைதியை கடைபிடிக்கவும்.
சதயம் : செயல்களில் கவனம் தேவை.
பூரட்டாதி : அலைச்சல் உண்டாகும்.

மீனம் :

உயர் அதிகாரிகளுடன் நட்பு உண்டாகும். எதிர்பார்த்த திருமண வரன்கள் அமையும். ஜவுளி வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு இலாபம் கிடைக்கும். நண்பர்களிடம் செல்வாக்கு உயரும். நிறுவனங்களில் பதவி உயர்வு கிடைக்கும். பிறருக்கு உதவும்போது எச்சரிக்கையுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

பூரட்டாதி : எச்சரிக்கையுடன் செயல்படவும்.
உத்திரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
ரேவதி : பதவி உயர்வு கிடைக்கும்.

No comments