இன்றைய இராசிபலன்கள் - 10.12.2017 - Tamil Live

Breaking

ads

ads

Sunday, 10 December 2017

இன்றைய இராசிபலன்கள் - 10.12.2017

மேஷம் : 

உயர்கல்வியில் செய்யும் புதுவித ஆராய்ச்சிகளால் புகழப்படுவீர்கள். பொதுகூட்டப் பேச்சுகளால் ஆதரவு கிடைக்கும். அந்நியர்களின் எதிர்பாராத உதவியினால் மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்களால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

அசுவினி : புதிய முயற்சிகள் கைகூடும்.
பரணி : ஆதரவு கிடைக்கும்.
கிருத்திகை : பொருளாதார மேன்மை ஏற்படும்.

ரிஷபம் :

சிந்தனையின் போக்கில் ஒரு புதிய மாற்றம் உண்டாகும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். விளை நிலங்களால் சுப விரயம் ஏற்படும். கடல் வழி பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். விலையுயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறம்

கிருத்திகை : இலாபகரமான நாள்.
ரோகிணி : புதிய மாற்றம் உண்டாகும்.
மிருகசீரிடம் : ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

மிதுனம் :

தைரியத்துடன் புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வாரிசுகளால் பெருமையடைவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு நல்ல முடிவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் மேன்மை அடைவதற்கான கூடுதல் பணிகளில் ஈடுபடுவார்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிடம் : காரிய சித்தி உண்டாகும்.
திருவாதிரை : தைரியம் பிறக்கும்.
புனர்பூசம் : வேலைப்பளு அதிகரிக்கும்.

கடகம் :

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அனுகூலமான நாள். தாயின் ஆதரவினால் பொருள் சேர்க்கை உண்டாகும். செய்யும் தொழிலில் புதுவித மாற்றங்களை செயல்படுத்தி இலாபம் அடைவீர்கள். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். நிர்வாக பொறுப்புகளால் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : அனுகூலமான நாள்.
பூ சம் : புதுவித மாற்றங்கள் ஏற்படும்.
ஆயில்யம் : மனமகிழ்ச்சி உண்டாகும்.

சிம்மம் :

அரசு பணிக்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். ஆலய வழிபாட்டில் மனம் ஒருமைப்படும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். வாகனப் போக்குவரத்தில் மிகுந்த கவனம் தேவை. போட்டிகளில் பங்கு பெற்று இலாபம் அடைவீர்கள். உடல் தோற்ற பொழிவிற்கான புதிய முயற்சிகளை செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
பூரம் : ஆதரவு கிடைக்கும்.
உத்திரம் : பயணங்களில் கவனம் தேவை.

கன்னி :

தந்தை செய்த அறச் செயல்களால் மேன்மையான சூழல் உண்டாகும். ஆன்மிக பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்ப்பதன் மூலம் நன்மைகளைப் பெறலாம். பெரிய நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு கௌரவ பதவிகள் வந்தடையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திரம் : பேச்சில் கவனம் தேவை.
அஸ்தம் : பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
சித்திரை : பதவிகள் உயரும்.

துலாம் :

அயல்நாட்டு பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். கடன்காரர்களால் ஏற்பட்ட மன வருத்தம் குறையும். நாத்திக எண்ணங்கள் மேலோங்கும். எதிர்பாராத நிகழ்வுகளால் சுப விரயம் ஏற்படும். கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறையும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மிதமான நீல நிறம்

சித்திரை : அமைதி காக்கவும்.
சுவாதி : மன வருத்தம் குறையும்.
விசாகம் : பொருள் விருத்தி ஏற்படும்.

விருச்சகம் :

சுயதொழில் மேற்கொள்வதற்கு சாதகமான சு ழல் உண்டாகும். விவாதங்களில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். எதிர்பாராத பரிசுகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பலனை எதிர்பார்க்காமல் செய்த செயல்களால் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

விசாகம் : ஆதரவு கிடைக்கும்.
அனுஷம் : எண்ணம் ஈடேறும்.
கேட்டை : அன்பு அதிகரிக்கும்.

தனுசு :

தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். மனதில் ஏற்பட்ட சஞ்சலம் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் கவனமுடன் நடந்து கொள்ளவும். பொதுத் தொண்டில் ஈடுபடுபவர்கள் நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : மனக்கவலைகள் நீங்கும்.
பூராடம் : கவனம் தேவை.
உத்திராடம் : நிதானத்துடன் செயல்படவும்.

மகரம் :

பயனற்ற பேச்சுகளை தவிர்ப்பதன் மூலம் மதிப்பு உயரும். பிள்ளைகளின் ஆதரவால் தொழிலில் இலாபம் கிடைக்கும். தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள், சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த உதவிகளால் மாற்றம் உண்டாகும். பணப்புழக்கத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

உத்திராடம் : வாக்குவாதத்தை தவிர்க்கவும். 
திருவோணம் : வாரிசுகளால் இலாபம் உண்டாகும்.
அவிட்டம் : கவனம் தேவை.

கும்பம் :

வணிகம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு சிறப்பான நாள். தொழில் கூட்டாளிகளிடம் சாதகமான சூழல் அமையும். திருமணத்திற்கு வரன் தேடுபவர்களுக்கு சுப செய்திகள் வந்தடையும். அரசு அதிகாரிகளிடம் இருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வாகன பயணங்களால் கீர்த்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல் 

அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
சதயம் : சுப செய்திகள் வந்தடையும்.
பூரட்டாதி : பலம் அதிகரிக்கும்.

மீனம் :

ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய முயற்சிகளால் சுப விரயங்கள் உண்டாகும். வெளிவட்டாரங்களில் கவனத்துடன் செயல்படவும். திடீர் யோகத்தால் இன்பம் உண்டாகும். பொருட்களை கையாளுவதில் கவனம் தேவை. இசைக்கலைஞர்களுக்கு அனுகூலமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

பூரட்டாதி : கவனம் தேவை.
உத்திரட்டாதி : பொறுமையுடன் செயல்படவும்.
ரேவதி : அனுகூலமான நாள்.

No comments:

ads